மீண்டும் அழைப்பு விடுத்த திமுக? ஏற்றுக்கொள்ளுமா காங்கிரஸ்?

 

மீண்டும் அழைப்பு விடுத்த திமுக? ஏற்றுக்கொள்ளுமா காங்கிரஸ்?

இரண்டு கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டாததால் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு காங்கிரசுக்கு திமுக அழைப்பு விடுத்திருக்கிறது.

மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலையில் நடைபெற இருக்கிறது.

மீண்டும் அழைப்பு விடுத்த திமுக? ஏற்றுக்கொள்ளுமா காங்கிரஸ்?

திமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விருப்பம் தெரிவித்திருக்கிறது. ஆனால் திமுக தரப்பிலோ, காங்கிரசின் எதிர்பார்ப்பில் பாதிக்கும் கிழே இறங்கிச்செல்வதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இதனால்தான், திமுகவிலிருந்து காங்கிரஸ் வெளியேறுகிறது என்ற பேச்சுக்கள் வந்தன.

28 தொகுதிகள்தான் தரமுடியும் என்று சொல்லி வந்த திமுக இப்போது 22 தர முன்வந்திருக்கிறது. ஆனால், 27 வேண்டும் என்று காங்கிரஸ் கறார் காட்டுகிறது.

ஆனால், கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்று காங்கிரஸ் தமிழக பொறூப்பாளர் திணேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

மீண்டும் அழைப்பு விடுத்த திமுக? ஏற்றுக்கொள்ளுமா காங்கிரஸ்?

திமுகதான் வெற்றிக்கூட்டணி என்பதால் குறைந்த தொகுதிகள் என்றால் அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்றும் ஒரு கோணத்தில் பார்க்கிறார்களாம். ஆனால், காங்கிரஸ் தொண்டர்களோ சத்தியமூர்த்தி பவனில் குவிந்து, அதிக சீட்டுகள் கொடுத்தால் மட்டுமே திமுகவுடன் கூட்டணியை தொடரணும் என்றும் முழக்கம் எழுப்பி வருகிறார்கள்.

இதனால் கூட்டணி தொடர்கிறதா? இல்லை காங்கிரஸ் வெளியேறுகிறதா? என்பது தெரியாமல் பதற்றமாக இருக்கிறார்கள் காங்கிரசார்.