கம்யூனிஸ்டுகளின் முடிவு: திருமாவளவன் மவுனம்

 

கம்யூனிஸ்டுகளின் முடிவு: திருமாவளவன் மவுனம்

திமுகவுடனான கம்யூனிஸ்டுகளின் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தலா 12 சீட்டுகள் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் திமுகவோ சிபிஐக்கு 5ம், சிபிஎம்க்கு 6 ம் மட்டுமே தருவதாக கூறியிருக்கிறது.

கம்யூனிஸ்டுகளின் முடிவு: திருமாவளவன் மவுனம்

இதனால் அதிருப்தி அடைந்த தோழர்கள், மதிமுக, விசிகவும் இதே மாதிரி அதிருப்தியில் இருப்பதால், 2 கிடைத்ததால் மமகவும் அதிருப்தியில் இருப்பதால், மீண்டும் மக்கள் நல கூட்டணி அமைத்துவிடலாமா என்று சிபிஎம் தரப்பில் ஆலோசனை கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு திருமாவளவன், தற்போதைய சூழலில் அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று கூறியிருக்கிறார். அதேநேரம் தங்களுக்கு 6 தொகுதிகள்தான் தருவதாக சொல்லப்பட்டிருப்பதால் அதுகுறித்து என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் திருமாவளவன் மவுனம் காத்து வருகிறார். நிர்வாகிகளுடன் அதுகுறித்து இன்று அவர் அவசர ஆலோசனை நடத்தினாலும் என்ன முடுவெடுப்பது என்று தெரியாமல் அமைதியாகவே இருக்கிறார். அதனால், அதிக இடம் கொடுக்கவிட்டால் கூட்டணி பேச்சுக்கே இடமில்லை என்று கறார் காட்டி வருகிறது சிபிஎம்.

கம்யூனிஸ்டுகளின் முடிவு: திருமாவளவன் மவுனம்

இது இப்படியிருக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் காலையில் கூடியிருக்கிறது. தொகுதி பங்கீடு, கூட்டணி விவகாரங்கள் குறித்து இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன. தங்களுக்கு கொடுக்கப்படும் குறைந்த தொகுதிகளை இப்போது திமுகவுக்கு பணிந்து வாங்கிகொண்டால் எதிர்வரும் காலங்களில் தொகுதி எண்ணிக்கையை உயர்த்துவது என்பது பெரும் பாடாக போய்விடும் என்று தோழர்கள் ஆலோசித்து வருன்றனர்.

கம்யூனிஸ்டுகள் நிலைமை இப்படி என்றால், காங்கிரஸ் கட்சி திமுகவிலிருந்து வெளியேறி, மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைக்கலாமா? என்று ஆலோசித்து வருவதாக தகவல்.