எம்.ஜி.ஆர் தந்த மீன் மார்க்கெட்டில்… மீண்டும் கமல்

 

எம்.ஜி.ஆர் தந்த மீன் மார்க்கெட்டில்… மீண்டும் கமல்

இன்று தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம். போராடிப் பெற்ற உலகளாவிய உரிமையான 8 மணி நேர வேலை என்பது இந்தியாவில் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. உழைக்கும் இடத்தில் பாதுகாப்பு தொடங்கி, வேலை உத்தரவாதம் வரைக்கும் பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது. இந்நிலை தொடரலாகாது என்று தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்.

எம்.ஜி.ஆர் தந்த மீன் மார்க்கெட்டில்… மீண்டும் கமல்

அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் மீண்டும் தனது தேர்தல் பிரச்சார பயணத்தினை தொடந்திருக்கிறார்.

’’நேற்று எம்.ஜி.ஆர் தந்த ஆலந்தூர் மீன் மார்க்கெட்டில் துவங்கியது என் பிரச்சாரம். மயிலை மாங்கொல்லை வரை தொடர்ந்தது மக்கள் வெள்ளம். இன்று மாலை மடிப்பாக்கம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன். நல்லவர்களே வருக!’’ என்று அழைப்பு விடுக்கிறார்.

எம்.ஜி.ஆர் தந்த மீன் மார்க்கெட்டில்… மீண்டும் கமல்

மக்கள் நீதி மய்யத்தில் மூத்த அரசியல் பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பழ.கருப்பையாவும், அப்துல்கலாமின் அரசியல் ஆலோசகரான பொன்ராஜூவும் இணைந்துள்ளனர். தவிர, சமம சரத்குமாரும், ஐஜேகேவும் கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு கூட்டணியில் இணைந்துள்ளனர். மேலும் சில கட்சிகள் மய்யத்தில் இணைய வாய்ப்பிருப்பதாக, மக்கள் விரும்பும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக என்னை முன்மொழிந்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர், அன்புச் சகோதரர் திரு. சரத்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் எதிர்வரும் நாட்களில் எம்மோடு கைகோர்ப்பார்கள். இம்முறை வெல்வது தமிழகமாக இருக்கட்டும் என்று கமலஹாசனே தெரிவித்துள்ளார்.

மய்யத்தின் பலம் கூடிவருவதால் மிகுந்த உற்சாகத்தில் கமல் மீண்டும் தனது பிரச்சாரத்தினை தொடங்கியிருக்கிறார்.