’’அப்பாவி தொண்டனுக்கு நேர்காணல் அல்வா’’

 

’’அப்பாவி தொண்டனுக்கு நேர்காணல் அல்வா’’

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்க திமுகவின் விருப்ப மனு கடந்த 17ம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற்றது, இதில் 8,388 விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டன, 7,967 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில், சுமார் 7,000 பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

’’அப்பாவி தொண்டனுக்கு நேர்காணல் அல்வா’’

மார் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரையிலும் மாவட்ட வாரியாக பிரித்து இந்த நேர்காணல் நடைபெறுகிறது. மார்ச் 2 செவ்வாய் காலை 8 மணி- கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, மத்திய, தென்காசி வடக்கு, தெற்கு ராமநாதபுரம் ஏரியாவுக்கும், மாலை 4 மணி- விருதுநகர் வடக்கு, தெற்கு, சிவகங்கை, தேனி வடக்கு, தெற்கு திண்டுக்கல் கிழக்கு, மேற்கு ஏரியாவில் இருந்து விருப்பமனு கொடுத்தவர்களுகும் நேர்காணல் நடைபெற்றது.

மார்ச் 3 புதன் காலை 9 மணிக்கு தொடங்கிய நேர்காணல் மதுரை வடக்கு, தெற்கு, மதுரை மாநகர் வடக்கு, தெற்கு நீலகிரி, ஈரோடு வடக்கு, தெற்கு. மாலை 4 மணி- திருப்பூர் மத்திய, வடக்கு, திருப்பூர் கிழக்கு, தெற்கு கோவை கிழக்கு, வடக்கு, தெற்கு கோவை மாநகர் கிழக்கு, மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது.

இன்று மார்ச் 4ம் தேதி வியாழன் காலை 9 மணிக்கு தருமபுரி கிழக்கு, மேற்கு நாமக்கல் கிழக்கு, மேற்கு, சேலம் கிழக்கு, மேற்கு, மத்திய புதுக்கோட்டை வடக்கு, தெற்கு, மாலை 4 மணிக்கு கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு, திருவாரூர், நாகை வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளுக்கும்,

’’அப்பாவி தொண்டனுக்கு நேர்காணல் அல்வா’’

மார்ச் 5 வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு தஞ்சை வடக்கு, தெற்கு, மத்திய, கடலூர் கிழக்கு, மேற்கு கள்ளக்குறிச்சி வடக்கு, தெற்கு விழுப்புரம் வடக்கு, மத்தியம்,மாலை 4 மணி – திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, வேலூர் கிழக்கு, மேற்கு, மத்திய காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளுக்கும்,

மார்ச் 6 ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு திருவள்ளூர் கிழக்கு, மத்திய, மேற்கு, சென்னை வடக்கு, வடகிழக்கு, சென்னை கிழக்கு, தெற்கு சென்னை மேற்கு, தென்மேற்கு மற்றும் மாலை 4 மணிக்கு புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெற இருக்கிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணலை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

’’அப்பாவி தொண்டனுக்கு நேர்காணல் அல்வா’’

திருச்சிக்கு இன்றைக்குத்தான் நேர்காணல் நடைபெற இருக்கும் நிலையில், சில தினங்களுக்கு முன்னதாகவே நேருவின் மகன் போட்டியிடுவதாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். நேருவின் மகன் என்பதால் அதில் மாற்றம் இருக்காது என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

அதனால்தான், ‘’இதற்கு எதற்கு விருப்ப மனு நேர்காணல் நாடகமெல்லாம். அப்பாவி தொண்டனுக்கு நேர்காணல் அல்வா !நேருவின் மகனை போல இன்னும் பலர் இங்கு ஆளப்பிறந்தவர்கள் , திமுகவின் அடிமட்ட தொண்டன் மட்டும் கொத்தடிமையாகவே இருக்கவேண்டும்.திமுகவினரே இனியாவது விழிப்போடு இருங்கள்’’என்கிறார் தமிழக பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம்.