யார் எவ்வளவு பணம் தருவார்களென ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே தெரிகிறது… திருமுருகன் காந்தி

யார் எவ்வளவு பணம் தருவார்களென  ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே தெரிகிறது… திருமுருகன் காந்தி

தமிழக சட்டமன்றத்திற்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி அன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் தேர்தல் நடத்த விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால், தேர்தல் ஆணையத்தின் பறக்குமடை அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து தமிழகமெங்கிலும் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணமும், பரிசுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

யார் எவ்வளவு பணம் தருவார்களென  ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே தெரிகிறது… திருமுருகன் காந்தி

பெரும்பாலும் இதில் பாதிக்கப்படுவோர் அன்றாட வியாபாரிகள்தான். அவர் சரக்கு வாங்கவும் விற்பனை செய்வதும் சம்பந்தமாக அலைந்து திரிவதால், வழக்கம் போலவே ஆவணங்கள் இன்றி அவர்கள் வியாபாரம் செய்து வருவதால் இந்த சோதனையில் சிக்கி அவதிப்பட்டு வருவார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் வியாபாரிகள் சந்திக்கும் பெரிய பிரச்சனைதான் இது.

யார் எவ்வளவு பணம் தருவார்களென  ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே தெரிகிறது… திருமுருகன் காந்தி

இது குறித்து மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ‘’தேர்தலில் யார் எவ்வளவு பணம் தருவார்களென ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே தெரிகிறது, ஆனால் கோழி வியாபரியிடம் 90,000 கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்வதாக ‘தனது நேர்மையை’ தேர்தல் ஆணையம் நிரூபிக்க முயலும் கூத்துகளில் பலியாவது சாமானியர்களே’’ என்று சாடுகிறார்.