கொ.ம.தே.க. – திமுக பேச்சுவார்த்தை ரத்து

 

கொ.ம.தே.க. –  திமுக பேச்சுவார்த்தை  ரத்து

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இன்று தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக இருந்தது. ஆனால், இன்றைய பேச்சுவார்த்தையை ரத்து செய்துவிட்டு நாளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறது திமுக.

கொ.ம.தே.க. –  திமுக பேச்சுவார்த்தை  ரத்து

எதிர்வரும் ஏப்ரல் 6 ம்தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மமக மற்றும் முஸ்லீம் லீக்குடன் தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில் இன்று நடைபெற இருந்த கொ.ம.தே.கவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை ரத்து செய்திருக்கிறது திமுக.