’’சார், இதுவெல்லாம் வேற லெவல் நையாண்டி ’’

 

’’சார், இதுவெல்லாம் வேற லெவல் நையாண்டி ’’

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று முன் தினம் விழுப்புரத்தில் நடந்த பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிவிட்டு சென்னை திரும்பி வரும்போது, மதுராந்தகத்தில் உள்ள சாலையோர உணவகத்தில் சாப்பிட்டார். அவர்களுடன் கட்சி நிர்வாகிகளுடன் சாப்பிட்டனர். அப்போது, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், இரண்டு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளை அமித்ஷாவுக்கு பரிசளித்தார்.

’’சார், இதுவெல்லாம் வேற லெவல் நையாண்டி ’’

அந்த பொம்மைகளை பரிசளிக்குபோது, அமித்ஷாவிடம் ஏதோ சொல்லிவிட்டு அவர் சிரிக்க, அமித்ஷாவும் புன்னகைத்தார்.

அமித்ஷாவுக்கு வானதி சீனிவாசன் கொடுத்த தலையாட்டி பொம்மைகள் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

’’சார், இதுவெல்லாம் வேற லெவல் நையாண்டி ’’

முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், ’’இந்தப் பொம்மைகளின் பெயர்களைச் சரியாகச் சொல்பவர்களுக்கு பரிசு உண்டு’’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதால், ‘’இது உலகத்துக்கே தெரியுமே… விவசாயி & பரதன் என்று தங்களுக்கு தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டவர்கள்’’ என்று பலரும் சொல்லி வருகின்றனர்.

’’சார், இதுவெல்லாம் வேற லெவல் நையாண்டி ’’ என்று ப.சிதம்பரத்தையும் சொல்லி வருகின்றனர்.