ஒரு கையில் தண்டால்! மாஸ் காட்டிய ராகுல்! வைரல் வீடியோ

 

ஒரு கையில் தண்டால்! மாஸ் காட்டிய ராகுல்! வைரல் வீடியோ

கன்னியாகுமரி மாவட்டத்தில் இடைவிடாத முழுமையான சுற்றுப்பயணத்தின் மூன்றாவது நாளில் நேற்று முலகுமூடு புனித ஜோசப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருடன் கலந்துரையாடினார் ராகுல் காந்தி. அப்போது ஒரு மாணவியின் விருப்பத்திற்கு இணங்கி அவருடன் ஆடினார்.

ஒரு கையில் தண்டால்! மாஸ் காட்டிய ராகுல்! வைரல் வீடியோ

கலந்துரையாடலில் முக்கிய கட்டமாக, உங்க பிட்னசுக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டப்போது, ‘’ரன்னிங், தண்டால், சைக்கிளிங் செய்கிறேன். ஜூடோவும் செய்கிறேன். தினமும் 100 தண்டால் எடுக்கிறேன். அந்த நேரத்தில் தோள் வலி எடுக்கும். ரன்னிங், சைக்கிளிங் செய்து வலியை சரி செய்துகொள்வேன். அதிகமாக இனிப்பு வகைகள் சாப்பிடமாட்டேன். அரிசியும், சப்பாத்தியும் அதிகம் எடுத்துக்கொள்ள மாட்டேன். புரத சத்து உள்ள உணவுகளைத்தான் அதிகம் சாப்பிடுவேன். அதிகம் சாப்பிடக்கூடாது; அதேநேரத்தில் குறைவாகவும் சாப்பிடக்கூடாது’’என்றார்.

ஒரு கையில் தண்டால்! மாஸ் காட்டிய ராகுல்! வைரல் வீடியோ

அப்போது மாணவின் கரோலின் தண்டால் எடுப்பதில் கில்லாடி என்று எல்லோரும் சொல்ல, யார் ஜெயிக்கிறார்கள் பார்ப்போமா என்று சவால் விடுத்தார்.

மாணவியும் ஆவலோடு போட்டிக்கு வந்தார். ராகுல்காந்தி மின்னல் வேகத்தில் தண்டால் எடுக்க, மாணவி கரோலின் மெதுவாக தண்டால் எடுத்தார். அதுமட்டுமல்ல, ஒற்றைக்கையினால் மின்னல் வேகத்தில் தண்டால் எடுத்தும் மாஸ் காட்டினார் ராகுல்.

ஒரு கையில் தண்டால்! மாஸ் காட்டிய ராகுல்! வைரல் வீடியோ

50 வயதாகும் ராகுல்காந்தி இந்த அளவுக்கு வேகமாக தண்டால் எடுப்பார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. உடலை அந்த அளவுக்கு உறுதியாக வைத்திருக்கிறார் என்று எல்லோரும் பேசிக்கொண்டனர்.

ராகுலுடன் துணிச்சலுடன் போட்டியில் பங்கேற்ற மாணவியையும் பலரும் பாராட்டினர்.

தண்டாலில் அசத்திய ராகுலின் வீடியோ வைரலாகி வருகிறது.