தம்பிக்கு குழந்தை பெற்றுத் தந்த சகோதரி!

 

தம்பிக்கு குழந்தை பெற்றுத் தந்த சகோதரி!

ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆண்டனி டீகனும் ரே வில்லியம்ஸும் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் வாழ்ந்து வந்தனர்.

தம்பிக்கு குழந்தை பெற்றுத் தந்த சகோதரி!

என்னதான் திருமணம் செய்துகொண்டு தங்கள் விருப்பப்படியே சந்தோசமாக இருந்தாலும் குழந்தை பெற்றெடுக்க வாய்ப்பில்லையே. காலம் செல்லச்செல்ல தங்களுக்கும் ஒரு குழந்தை வேண்டும், அக்குழந்தைக்கு பெற்றோராய் இருந்து எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது. ஆனால், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து, வெளியே சொல்லவும் தயக்கத்தில் இருந்தனர்.

தம்பியின் ஆசையை புரிந்துகொண்ட சகோதரி டிரேஸி ஹல்ஸ், அவர்களுக்கு குழந்தை பெற்றுக்கொடுக்க முன்வந்தார்.

ஆண்டனி டீகன், ரே வில்லியம்ஸ் இருவரிடமிருந்தும் விந்துக்கள் சேகரிக்கப்பட்டு, செயற்கை கரு ஊட்டல் முறையில் கரு உண்டாக்கப்பட்டது. யாருடையை விந்தணு மூலம் குழந்தை உருவானது என்று தெரிவிக்கவே இல்லை.

குழந்தை பிறந்ததும், ஆண்டனி டீகனும் ரே வில்லீயம்ஸும் பெற்றோராக அந்த குழந்தையை சந்தோசமாக வளர்த்து வருகின்றனர். தங்கள் கனவை நிறைவேற்றிய டிரேஸி ஹல்ஸ்சுக்கு கோடி நன்றிகள் தெரிவித்துள்ளனர்.