திமுகவுடன் மமக, முஸ்லீம் லீக் தொகுதி பங்கீடு கையெழுத்தானது

 

திமுகவுடன் மமக, முஸ்லீம் லீக் தொகுதி பங்கீடு கையெழுத்தானது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி தொடர்பாக திமுக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில், மமகவும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, கையெழுத்தானது.

திமுகவுடன் மமக, முஸ்லீம் லீக் தொகுதி பங்கீடு கையெழுத்தானது

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் முஸ்லீம் லீக் சார்பாக 6 நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதில் திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மல்லை சத்யா தலைமையிலான மதிமுக நிர்வாகிகளும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்காக அறிவாலயம் வந்திருக்கின்றனர்.