ஒரே ஆம்புலன்ஸ்சில் 22 சடலங்கள்: உறவினர்கள் கண்ணீர்

 

ஒரே ஆம்புலன்ஸ்சில் 22 சடலங்கள்: உறவினர்கள் கண்ணீர்

டோக்கன் பெற்று நீண்ட வரிசையில் காத்திருந்து சடலங்களை எரிக்கும் அவலத்திற்கு வந்து விட்டது இந்தியா. ஒரு சடலத்தின் மேல் இன்னொரு சடலத்தை அடுக்கி வைத்து எரிக்கும் அளவுக்கும் அடுத்தடுத்து உயிரிழப்புகள் கூடிக்கொண்டே இருக்கிறது. பூங்காக்கள் எல்லாம் மயானங்கள் ஆக மாற்றப்பட்டு உடல்கள் எரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு ஆம்புலன்சில் 22 உடல்கள் அடைத்து திணிக்கப்பட்டு மயானத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றது . இத்தனை அவலங்களும் இந்த கொரோனா இரண்டாவது அலையில்தான் இந்தியா சந்திக்க வேண்டியதாகி விட்டது.

ஒரே ஆம்புலன்ஸ்சில் 22 சடலங்கள்: உறவினர்கள் கண்ணீர்

டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் பாதிப்பு அதிகம் இருக்கிறது. இம்மாநிலங்களில் உயிரிழப்போர் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 2 ஆயிரத்துக்கு மேல் பதிவாகிறது. இதனால் தான் உயிரிழப்புகள் அதிகமாக இருப்பதால் மயானங்கள் பற்றாக்குறையினால் பூங்காக்கள் மயானங்கள் ஆக மாற்றப்பட்டு அங்கு உடல்கள் எரிக்கப்பட்டு வருகின்றன.

அணையாத விளக்கு என்பது மாதிரி அணையாத சுடுகாடாய் தொடர்ந்து பிணங்கள் வரிசையில் காத்திருப்பதால் சுடுகாடு எந்த நேரமும் எரிந்து கொண்டே இருக்கிறது.

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த கொரோ னா நோயாளிகள் 22 பேரின் உடல்களை ஒரே ஆம்புலன்சில் அடைத்துவைத்து மயானத்துக்கு கொண்டு சென்றனர். இதைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தனர் உறவினர்களில் சிலர் இதை போட்டோ வீடியோ எடுத்து இதை பார்த்துவிட்ட போலீசார் அவர்களை விரட்டி செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். ஆனாலும் புகார் ஆட்சியர் வரைக்கும் சென்று விட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. விசாரணையின் முடிவில் குற்றம் செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று அவர் எழுதி வைத்திருக்கிறார்.