ஸ்டாலினை புகழ்ந்து தள்ளும் கமல்

 

ஸ்டாலினை புகழ்ந்து தள்ளும் கமல்

அரசியல் காரணங்களால் கருணாநிதியின் உடலுக்கு ஸ்ரீபிரியா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் வந்து அஞ்சலி செலுத்தியதோடு சரி, இறுதிச்சடங்கில் கூட கமல்ஹாசன் பங்கேற்கவில்லை. ’’கட்சிக்கு அப்பாற்பட்ட உறவு எங்களுடையது. நாட்டுக்கு ஒரு தலைவரை இழந்தது மட்டுமல்லாது, தனிப்பட்ட முறையில் ஒரு குடும்ப உறுப்பினரை இழந்த உணர்வு உள்ளது. அவரின் தமிழைப் பார்த்து மேலே வந்தவர்களில் ஒருவன் நான்’’ என்று அஞ்சலி செலுத்த வந்தபோது மட்டும் உருக்கமுடன் தெரிவித்திருந்தார் கமல்.

ஸ்டாலினை புகழ்ந்து தள்ளும் கமல்

அதன்பின்னரும் கூட ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனங்களை வீசி வந்தார் கமல். கூட்டணிக்கு ஸ்டாலினே நேரடியாக தன்னை அழைக்காமல் தூது விட்டது குறித்தும் கடுமையாக சாடினார் கமல்.

இந்நிலையில் இன்று ஸ்டாலின் 68வது பிறந்த தினத்தை முன்னிட்டு, ‘’விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்’’ என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.