222 கி.மீ வேகம்…ரன்வேயில் ஜீப் மற்றும் ஒரு ஆள் – விபத்தை தடுக்க உடனே டேக் ஆஃப் செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

 

222 கி.மீ வேகம்…ரன்வேயில் ஜீப் மற்றும் ஒரு ஆள் – விபத்தை தடுக்க உடனே டேக் ஆஃப் செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிரில் ஜீப் மற்றும் ஒரு ஆள் நின்றிருந்ததால் விமானம் உடனடியாக டேக் ஆஃப் செய்யப்பட்டது.

புனே: ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிரில் ஜீப் மற்றும் ஒரு ஆள் நின்றிருந்ததால் விமானம் உடனடியாக டேக் ஆஃப் செய்யப்பட்டது.

இன்று காலை புனே விமான நிலையத்தில் ஏர் இந்தியா ஏ321 விமானம் டெல்லிக்கு புறப்பட தயாரானது. வானில் பறப்பதற்காக ஓடுபாதையில் சுமார் 120 நாட்ஸ் (222 கி.மீ) வேகத்தில் விமானம் ஓடத் தொடங்கியது. அந்த நேரத்தில் ஓடுபாதையின் எதிரில் ஒரு ஜீப்பும், ஒரு மனிதனும் நின்று கொண்டிருந்ததை பார்த்த விமானிகள் உறைந்து போயினர். ஆனாலும் சமயோசிதமாக செயல்பட்ட விமானிகள், அவர்கள் மீது விமானம் மோதி விபத்து ஏற்படுவதை தவிர்க்க, உடனடியாக விமானத்தை டேக் ஆஃப் செய்து வானத்தில் பறக்க வைத்தனர்.

ttn

இந்த சம்பவத்தில் விமானத்தின் முன் அடிப்பகுதி சேதமடைந்தது. ஆனாலும் வானில் தொடர்ந்து பறந்த அந்த ஏர் இந்தியா விமானம் பாதுகாப்பாக டெல்லி சென்றடைந்தது. விமானம் ஓடுபாதையில் இருந்து பறக்க தயாரானபோது நடந்த இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சேதமடைந்த விமானம் வானில் பறக்க தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.