சினிமாவில் ஹீரோவான ஹரிநாடார்

 

சினிமாவில் ஹீரோவான ஹரிநாடார்

நெல்லை மாவட்டம் இலந்தைக்குளம் கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஹரிநாடாரின் சின்ன வயசு ஆசை ரொம்ப வித்தியாசமானது. வறுமையின் காரணமாக, நிறைய சம்பாதிச்சு உடம்பு முழுவதும் நகைகளை போட்டுக்கொள்ளணும் என்கிற ஆசையை பின்னாளில் பணம் சேர்ந்ததும் அது மாதிரியே செய்துவிட்டார்.

சினிமாவில் ஹீரோவான ஹரிநாடார்

கழுத்துல, கையில என்று முன்பெல்லாம் 3 கிலோ நகைகளுடன் வலம் வந்துகொண்டிருந்த ஹரிநாடார், தற்போது 10 கிலோ நகைகளுடன் வலம் வருவதாக தெரிகிறது.

சினிமாவில் ஹீரோவான ஹரிநாடார்

கொஞ்சகாலம் சசிகலா புஷ்பா எம்.பியுடன் சென்றுகொண்டிருந்தார். பனங்காட்டுப்படை கட்சியை துவக்கி நாங்குனேரியில் போட்டியிட்டு மூன்றாவது இடமும் பிடித்தார்.வட்டித்தொழில் உள்ளிட்ட ஏராளமான தொழில்கள் செய்தும் வரும் ஹரிநாடாருக்கு, சினிமாக்களுக்கு பைனான்ஸ் செய்து வந்ததன் மூலமாக சினிமா ஆசை ரொம்ப நாளாகவே இருந்து வந்தது. ’2k அழகானது காதல்’படத்தில் நடித்து தயாரிக்கிறார். வனிதா விஜயகுமார் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

சினிமாவில் ஹீரோவான ஹரிநாடார்