எடப்பாடியாரை ஏற்றுக்கொண்ட மோடி -அமித்ஷா! முதல்வர் வேட்பாளர் சர்ச்சை ஓய்ந்தது!

எடப்பாடியாரை ஏற்றுக்கொண்ட மோடி -அமித்ஷா! முதல்வர் வேட்பாளர் சர்ச்சை ஓய்ந்தது!

ட்சி தொடங்கவில்லை என்று ரஜினிகாந்த் அறிவிக்கும் வரையிலும் அதிமுகவிடம் முரண்டு பிடித்துக்கொண்டிருந்தது பாஜக. ரஜினி வழி விட்ட பின்னர்தான் ஒரு வழிக்கு வந்தது பாஜக.

எடப்பாடியாரை ஏற்றுக்கொண்ட மோடி -அமித்ஷா! முதல்வர் வேட்பாளர் சர்ச்சை ஓய்ந்தது!

பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று மேடைக்கு மேடை முதல்வர் எடப்பாடிபழனிச்சாமியும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சொல்லிவந்தாலும், பாஜகவினர் வாயிலிருந்து, ’கூட்டணி தொடர்கிறது’ என்ற வார்த்தையே வரவில்லை. ’’மேலிடம் முடிவு செய்யும் ’’என்றே தமிழக பாஜக நிர்வாகிகள் மழுப்பி வந்தனர்.

மேலிடம் சென்னை வந்து சென்றபோதும் கூட, அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று சொல்லவே இல்லை.

எடப்பாடியாரை ஏற்றுக்கொண்ட மோடி -அமித்ஷா! முதல்வர் வேட்பாளர் சர்ச்சை ஓய்ந்தது!

பெரும் போராட்டத்திற்கு பின்னர் தன்னை முதல்வர் வேட்பாளராக, ஓபிஎஸ் வாயினால் சொல்ல வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று பாஜகவினரின் வாயிலிருந்து வரவே இல்லை.

‘’முதல்வர் வேட்பாளர் என்பது அதிமுகவிற்குள் எடுத்த முடிவு. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் கூடி, அப்போது அனைவரும் சேர்ந்து யாரை முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்’’ என்று செம கெத்தாக வானதி சீனிவாசன் பேசியதை பார்த்தபோது, சரிதான்.. அப்ப எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளர் இல்லை போலிருக்கிறது. பாஜக யாரை முடிவு செய்யப்போகிறதோ என்ற கேள்வி இருந்தது.

தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை வேறு அதிமுகவை விமர்சிக்க ஆரம்பித்தார்.

எடப்பாடியாரை ஏற்றுக்கொண்ட மோடி -அமித்ஷா! முதல்வர் வேட்பாளர் சர்ச்சை ஓய்ந்தது!

பாஜகவின் கெத்’தை பார்த்து பாமகவும் முறுக்கிக்கொண்டது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டினை அறிவித்தால்தான் கூட்டணி பற்றி பேசுவோம் என்று கறார் காட்டினார் ராமதாஸ்.

அமித்ஷா மேற்பார்வையில் பாஜக மூன்றாவது அணி அமைக்கப்போகிறது என்றே பரபரப்பு பேச்சுக்கள் எழுந்தன. ஓபிஎஸ்சை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்போகிறது பாஜக என்றும் பேச்சுக்கள் எழுந்தன. ரஜினி கட்சி தொடங்கவில்லை என்ற பின்னர்தான், பாஜக நிர்வாகிகள் அதிமுக மீது வழக்கம் போலவே கனிவான பார்வையினை செலுத்தினர்.

எடப்பாடியாரை ஏற்றுக்கொண்ட மோடி -அமித்ஷா! முதல்வர் வேட்பாளர் சர்ச்சை ஓய்ந்தது!

இதற்கிடையில், ஒருபக்கம் ஓபிஎஸ்சை பேலன்ஸ் செய்துகொண்டு, மறுபக்கம் சசிகலா பக்கம் பார்வையினை கவனமாக வைத்துக்கொண்டு, கூட்டணி கட்சிகளையும் சமாளித்துக்கொண்டு, சூறாவளி பிரச்சார பயணத்தினை மேற்கொண்டு வந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

நிறையவே தள்ளாட்டங்கள் இருந்தாலும் சாமர்த்தியத்தினால் ஒருகட்டத்தில் நின்றுவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த சமயத்தில்தான் சென்னை வந்த பிரதமர் மோடி, எடப்பாடி பழனிச்சாமியுடன் மட்டும் 10 நிமிடங்கள் தனியாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கும் உயர்ந்தது.

எடப்பாடியாரை ஏற்றுக்கொண்ட மோடி -அமித்ஷா! முதல்வர் வேட்பாளர் சர்ச்சை ஓய்ந்தது!

தற்போது பாஜக – அதிமுக இடையே தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நேற்று சட்டமன்றத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதால் பாமகவும் அதிமுகவுடன் தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வருகிறது.

எடப்பாடியாரை ஏற்றுக்கொண்ட மோடி -அமித்ஷா! முதல்வர் வேட்பாளர் சர்ச்சை ஓய்ந்தது!

நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்பது உறுதியானது. முதல்வர் வேட்பாளர் சர்ச்சை ஓய்ந்தது.