காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன்…கமல்ஹாசனை சந்தித்த பின்னர் சரத்குமார் உருக்கம்

காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன்…கமல்ஹாசனை சந்தித்த பின்னர் சரத்குமார் உருக்கம்

கேட்கிற இடங்களை கொடுக்காவிட்டால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவோம் என்று இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் ரவி பச்சமுத்து முன்னர் சொல்லியது போலவே, அக்கூட்டணியில் இருந்து விலகிவிட்டார். சமகவை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்காததல் அதிமுக கூட்டணியில் இருந்த விலகியது சமக.

காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன்…கமல்ஹாசனை சந்தித்த பின்னர் சரத்குமார் உருக்கம்

சமகவும், ஐஜேகவும் இணைந்துள்ளன. இதையடுத்து மூன்றாவது அணி அமைக்கும் முடிவில், மக்கள் நீதி மய்யம் சென்று கமல்ஹாசனை சந்தித்தார் சரத்குமார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’நல்ல எண்ணம் கொண்டவர்கள் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று கமல்ஹாசனை சந்தித்தேன். கமல்ஹாசனும், நல்லவர்கள் எல்லாம் இணையலாம் என்று சொல்லி இருக்கிறார்’’ என்றார்.

காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன்…கமல்ஹாசனை சந்தித்த பின்னர் சரத்குமார் உருக்கம்

‘’எங்கள் கூட்டனி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்களின் இப்போதைய நோக்கம். எக்கள் கூட்டணி வெற்றிபெற்ற பிறகுதான் முதல்வர் யார் என்பது குறித்து முடிவெடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

பேட்டியின் இறுதியில், ’’மக்களுக்கு நல்லது செய்யவே நான் அரசியலுக்கு வந்தேன். மக்களின் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன். பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களித்து விடாதீர்கள்’’ என்று உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்தார்.