இன்று இரவு சென்னை வருகிறார் அமித்ஷா

 

இன்று இரவு சென்னை வருகிறார் அமித்ஷா

சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற இருப்பதால், சென்னையில் முதல்வர் இல்லத்தில் அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கிஷண் ரெட்டி, வி.கே.சிங், சி.டி.ரவி, எல்.முருகன் உள்ளிட்ட பாஜக பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். முதல்வரின் ஆலோசனைக்கு பின்னர் துணைமுதல்வருடனும் ஆலோசனை நடத்துகின்றனர்.

இன்று இரவு சென்னை வருகிறார் அமித்ஷா

இரண்டு முறை தமிழகம் வந்து சென்றுள்ள அமித்ஷா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தொகுதி பங்கிட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார்.
இன்று இரவு 10 மணிக்கு சென்னைக்கு வரும் அமித்ஷா, சென்னையில் தங்குகிறார். அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குறித்து பாஜக நிர்வாகிகள் அமித்ஷாவை சந்தித்து தெரிவிப்பார்கள் என்று தெரிகிறது.

சென்னையில் இரவு தங்கிவிட்டு நாளை விழுப்புரம் மற்றும் காரைக்காலில் நடைபெறூம் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.