‘ரத்து’விவகாரம்: ஸ்டாலின் மீது முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு

 

‘ரத்து’விவகாரம்: ஸ்டாலின் மீது முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு

முதல்வர் போட்டு வைத்திருந்த திட்டம் ‘லீக் ‘ஆகும் பரபரப்பு பின்னணி! என்ற தலைப்பில், கடந்த 20.2.2021 அன்று நமது டாப் தமிழ் நியூஸ் இணையத்தி கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில், விழுப்புரம் மாநாட்டில் மகளிர் சுய உதவி குழு கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிடலாம் என்று திட்டமிட்டிருந்தார் முதல்வர். இதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட ஸ்டாலின், முன்கூட்டியே அறிவித்துவிட்டார். இனிஅறிவித்தால், வழக்கம் போலவே நான் சொல்லித்தான் முதல்வர் அறிவித்தார் என்று விமர்சனம் செய்வார்.

‘ரத்து’விவகாரம்: ஸ்டாலின் மீது முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு

மகளிர் சுய உதவி குழு கடன் விவகாரம் மட்டுமல்ல; விவசாய கடன்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளிட்ட விவகாரங்களிலும் இதுதான் நடந்திருக்கிறது. எப்படியோ மோப்பம் பிடித்தூவிட்டு முன்கூட்டியே அறிவித்து, ஒரு பொய்யான பிம்பத்தினை கட்டமைத்து வருகிறார் ஸ்டாலின். ஒரு திட்டத்தினை அறிவிப்பதற்கு முன்பாக, அதுகுறித்து அதிகாரிகளுடன் முதல்வர் கலந்தாலோசிப்பது வழக்கம். இந்த ஆலோசனையில்தான் சிலரால் இது லீக் ஆகிவிடுகிறது. இதை மோப்பம் பிடிப்பதற்காகவே தீவிரம் காட்டிவருகிறார் ஸ்டாலின் என்று அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

‘ரத்து’விவகாரம்: ஸ்டாலின் மீது முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு

இந்நிலையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘’அரசு அறிவிக்க உள்ளவற்றை ஸ்டாலின் முன்கூட்டியே தெரிந்துகொள்கிறார். ஆனால், அவர் சொல்லித்தான் நான் செய்ததாக, ரத்து செய்ததாக உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார். அரசு அறிவிக்க உள்ளவற்றை எல்லா அறிந்துகொண்டு முன்கூட்டியே அறிவித்துவிடுகிறார் ஸ்டாலின்’’ என்றார்.

மேலும், ‘’எந்தெந்த காலகட்டத்தில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமோ அந்தந்த காலகட்டத்தில் முறையாக செய்கிறோம். எல்லா மாநிலங்களும் கடன் வாங்கித்தான் மக்களுக்கு நலத்திட்டங்களை செய்கின்றன. கையில் பணத்தை வைத்துக்கொண்டு எந்த மாநிலமும் செய்வதில்லை’’என்றார்.