திருக்குறள் படித்து வருகிறேன்; அதன் ஆழத்தால் திகைத்துப் போகிறேன் – ராகுல்காந்தி

 

திருக்குறள் படித்து வருகிறேன்; அதன் ஆழத்தால் திகைத்துப் போகிறேன் – ராகுல்காந்தி

காவி சாயம் பூசுவது, பூணூல் போடுவது, குடுமி வைப்பது என்று வள்ளுவரை தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ள பாஜகவினர் முயன்று வரும் நிலையில், பிரதமர் மோடி சமீப காலங்களாக திருக்குறள் சொல்லி வருகிறார்.

திருக்குறள் படித்து வருகிறேன்; அதன் ஆழத்தால் திகைத்துப் போகிறேன் – ராகுல்காந்தி

கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ’’வணக்கம்’’ என்று தமிழில் கூறி பேசத் தொடங்கினார்.

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். முன்னதாக,

புதுச்சேரி மாநிலத்தில் நடந்த விழாவில் பேசியபோது, ‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ‘’திருக்குறள் படித்து வருகிறேன். அதன் ஆழத்தால் திகைத்துப்போகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். மேலும், ’’திருக்குறளை கேட்க கேட்க அது காது வழியாக நுழையும்போது புரிந்துகொள்ள முடிகிறது’’என்று தெரிவித்துள்ளார்.