ஸ்டாலின் புறக்கணிப்பு; திமுகவிலிருந்து வெளியேறும் காங்கிரஸ்?

 

ஸ்டாலின் புறக்கணிப்பு; திமுகவிலிருந்து வெளியேறும் காங்கிரஸ்?

திமுகவுக்கு 150 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உறுதியாக இருக்கிறது என்று ஐபேக் கொடுத்த சர்வே ரிசல்ட்டை நம்பிக்கொண்டு கூட்டணி கட்சிகளை தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறார் ஸ்டாலின். இதனால், திமுகவுடன் கடந்த 10 வருடங்களாக கைகோர்த்து நிற்கும் கூட்டணி கட்சியினரோ பெரும் எதிர்ப்பார்ப்புகளை சேமித்து வைத்திருந்து இப்போது ஏமாற்றத்தினை மட்டுமே செலவளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டாலின் புறக்கணிப்பு; திமுகவிலிருந்து வெளியேறும் காங்கிரஸ்?

‘’ஒரு சீட்டு கூட தரலேன்னாலும் பரவாயில்லை; திமுகவுக்கு பாடுபடுவோம்’’ என்று கட்சியினரை சமாதானப்படுத்துவது மாதிரி, ஸ்டாலின் அப்படியாவது இரங்கி வருவாரா என்று பார்க்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

வைகோ இப்படி தயங்கினாலும், ’’கூட்டணிக்கட்சியினரை அரவணைத்துச் செல்லும் தலைமைப்பண்பு இங்கே எந்த தலைவரிடத்திலும் இல்லை’’ என்று பகிரங்கமாகவே தாக்கி பேசினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

ஸ்டாலின் புறக்கணிப்பு; திமுகவிலிருந்து வெளியேறும் காங்கிரஸ்?

40 தொகுதிகளுக்கு மேல் கேட்ட காங்கிரசுக்கு 20 கூட கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அதிலும் கூட, கேட்ட தொகுதி கிடைக்காது என்பது தொகுதிப்பங்கீட்டின் முதல் கட்ட பேச்சுவார்த்தையிலேயே உணர்ந்துவிட்டார்கள் காங்கிரசார்.

’முதல் கோணல் முற்றும் கோணல்’ என்று சொல்வார்களே, அந்த லட்சணத்தில்தான் நடந்திருக்கிறது, திமுக, காங்கிரஸ் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை. இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் சார்பில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, கர்நாடகாவின் தினேஷ் குண்டுராவ், தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி போன்றோர் பங்குபெற்றனர்.

ஸ்டாலின் புறக்கணிப்பு; திமுகவிலிருந்து வெளியேறும் காங்கிரஸ்?

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், காங்கிரஸ் சார்பாக இத்தனை பேர் பங்கேற்றிருக்க, நியாயப்படி இதில் கலந்துகொள்ள வேண்டிய திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.

ஸ்டாலினின் இந்த புறக்கணிப்பு, சீட்டு விஷயத்தில் திமுக என்ன மனநிலையில் இருக்கிறது என்பதை கோடிட்டுக் காட்டியுள்ளதாக காங்கிரசார் குமுறுகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ‘’குனியக் குனிய குட்டத்தான் செய்வார்கள். கூட்டணி வேண்டாமென துணிந்து முடிவெடுங்கள்’’ என சத்தியமூர்த்தி பவனுக்கு கதர்ச்சட்டைகள் போன் போட்டு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

தலைமைக்கு தகவல் போயிருக்கிறது. தொண்டர்களின் மனநிலையில்தான் டெல்லியும் இருப்பதாகவே தகவல்.