‘’காமராஜர் வீட்டுக்கு தீ வைத்தது சங் பரிவாரம்; ஆர்எஸ்எஸ்சை தாக்கி பேசியவர் எம்ஜிஆர்’’

 

‘’காமராஜர் வீட்டுக்கு தீ வைத்தது சங் பரிவாரம்; ஆர்எஸ்எஸ்சை தாக்கி பேசியவர் எம்ஜிஆர்’’

கோவை கொடிசியா அரங்கத்தில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பிரதமரின் வருகையை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த கட் -அவுட்களில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர். கட் -அவுட்களும் இருந்தன.

‘’காமராஜர் வீட்டுக்கு தீ வைத்தது சங் பரிவாரம்; ஆர்எஸ்எஸ்சை தாக்கி பேசியவர் எம்ஜிஆர்’’

இதுகுறித்து மூத்த அரசியல் விமர்சகர் அருணன், ‘’திருவள்ளுவரை திருடப் பார்ப்பது போலே காமராஜரையும் எம்ஜிஆரையும் திருடப் பார்க்கிறார்கள். காமராஜர் வீட்டுக்கு தீ வைத்தது சங் பரிவாரம். ஆர்எஸ்எஸ்சை தாக்கி பேசியவர் எம்ஜிஆர்’’ என்கிறார்.

மேலும், ‘’எம்ஜிஆர் படத்தை கமல் பயன்படுத்தியபோது எதிர்த்த அதிமுக அவரது கட்அவுட்டை பாஜக தனது கூட்டத்தில் வைத்ததை எதிர்க்காதது ஏன்? அவ்வளவு பயம்!’’ என்று தெரிவித்துள்ளார்.

பாஜக அரசியல் கூட்டத்தில் காமராஜர் கட் அவுட் வைக்கப்பட்டது குறித்து மேலும், ‘’அவசரநிலை ஆட்சியை எதிர்த்தார் காமராஜர் என்கிறார் ஒரு சங்கி. இன்று மட்டும் என்ன வாழுதாம்! அதைவிட மோசமான மநுவாத பாசிச ஆட்சி நடக்குது. எனவே இதை எதிர்த்து இன்னும் தீவிரமாக கிளம்பியிருப்பார். அவரது கட்அவுட்டை வைக்க பாஜகவிற்கு அருகதை இல்லை’’ என்கிறார்.