அந்த நெருப்பு ஆபத்தானது… கமல் எச்சரிக்கை

 

அந்த நெருப்பு ஆபத்தானது… கமல் எச்சரிக்கை

விண்ணைத்தொடும் பெட்ரோல், டீசல், கேஸ் விலையினாலும், இந்த விலையேற்றத்தினால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்திருப்பதாலும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

அந்த நெருப்பு ஆபத்தானது… கமல் எச்சரிக்கை

இந்தியாவை விட பொருளாதார ரீதியாக பின் தங்கியிருக்கும் நாடுகளில் கூட பெட்ரோல் விலை குறைவாகவே இருக்கும் நிலையில், ஏன் மத்திய அரசு மட்டும் வரி விதிப்பை குறைக்க கூடாது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தினால் சரக்கு லாரிகளின் வாடகை உயர்ந்து அத்தியாவசி பொருட்கள் கிடுகிடுவென உயர்ந்துகொண்டே போகிறது. கியாஸ் விலையேற்றத்தினால் குடும்பத்தினர் மட்டுமல்லாது, ஓட்டல்களில் உணவு பொருட்களும் உயர்ந்து வருகிறது.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றன.

அந்த நெருப்பு ஆபத்தானது… கமல் எச்சரிக்கை

இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் கூட, ’’பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையேற்றத்தினை கட்டுப்படுத்தி குறைப்பது குறித்து மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் வருகிறது தமிக அரசு’’ என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், ‘’கண்ணுக்கெட்டாத் தொலைவில் பறப்பவை எவை என்கிறீர்களா? பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டுக்கும் பக்கத்தில் பறப்பது சமையல் எரிவாயுதான். ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு?’’ என்ற கேள்வியை எழுப்பி, ’’அந்த நெருப்பு ஆபத்தானது’’என்று எச்சரிக்கிறார்.