மன்னிப்பு கேள் கமல்… கொந்தளிக்கும் திமுகவினர்

 

மன்னிப்பு கேள் கமல்… கொந்தளிக்கும் திமுகவினர்

மக்கள் நீதி மய்யத்தின் நான்காம் தொடக்கவிழா அண்மையில் சென்னை தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தலைமையேற்று பேசிய கமல்ஹாசன், ‘’கட்சி தொடங்கியது காவி துண்டு போட்டுக்கொள்ள அல்ல; மய்யம் என்பது கொள்கைப்பற்று’’என்றார். ‘’திமுகவில் இருந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், தூது விடுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. தலைமை அழைக்க வேண்டும்’’ என்றார் அதிரடியாக.

மன்னிப்பு கேள் கமல்… கொந்தளிக்கும் திமுகவினர்

‘’கருணாநிதியிடன் எனக்கு நெருக்கம் கிடையாது. ஆனால், எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்தேன்.’’என்றவர், ‘’விட்டுக்கொடுத்தல்தான் அரசியல். நான் ஆரோக்கியமாக இருக்கும்போதே அரசியல் செய்துவிடவேண்டும். இப்போது எனக்கு 60 வயது ஆகிறது. மக்களுக்கு சேவை செய்யும் அந்த ஆக்டிங் லைப் எனக்கு வேண்டும். அஞ்சு வரும்தான். அப்புறம் ஒரு அஞ்சு வருசம் வேலை செய்யணும். 10 வருசம்தான். அதுக்கு அப்புறம் சக்கர நாற்காலியில எல்லாம் உட்கார்ந்துகிட்டு மக்களை தொந்தரவு செய்ய மாட்டேன்’’ என்று பேசினார் கமல்ஹாசன். இந்த வீடியோ வைரலாகி திமுகவினரை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.

மன்னிப்பு கேள் கமல்… கொந்தளிக்கும் திமுகவினர்

கருணாநிதி பற்றி கமல்ஹாசன் பேசியதை கேட்டு, ’’உசுரோட இருக்கற வர ஒரு வார்த்தை பேச வக்கில்ல. நாட்ட விட்டு போறேன்னு மூக்க சிந்த வேண்டியது. இப்ப இப்படி பேசறது. இந்த மானங்கெட்ட பொழப்பு தேவையா’என்று திமுகவினர் கொந்தளிக்கின்றனர். #மன்னிப்புகேள்_கமல் என்ற ஹேஷ்டேக்கினையும் டிரெண்டாக்கி வருகின்றனர்.

‘’முற்போக்கு பாப்பான் நாட்டுக்கே ஆபத்து என்று அன்றே சொன்னார் பெரியார். மனதில் எவ்வளவு வன்மம் இருந்தால் இந்தளவுக்கு தரமற்ற பேச்சு வரும். நாளைய சீமானாக வருவதற்கு அனைத்து தகுதியும் உங்களுக்கு அதிகமாகவே உண்டு. இம்மாதிரியான மட்டமான பேச்சை விடுங்க. அல்லது அரசியலை விட்டுவிடுங்கள். நாட்டுக்கே நல்லது’’ என்கிறார் இராவணன் அதித்யன்.

’’தமிழ்நாட்டை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவை எங்கள் சமூக நீதி சக்கர நாற்காலிகள்தான்…..’’என்கிறார் சரவணன் செல்வராஜ்.

’’சினிமாவில் ஹீரோயின்களோடு டூயட் பாடி முடித்து விட்டு இறுதியில் அரசியலில் ஆதாயம் தேட வருபவருக்கெல்லாம் இந்த சக்கர நாற்காலியின் மகிமை புரியாது! இன்று தமிழர்களின் வாழ்க்கைச் சக்கரம் தடையில்லாமல் சுழல்கிறது என்றால் அதற்கு காரணம் இந்த சக்கர நாற்காலி தான்!’’என்கிறார் வனிதா.

’’முதுமை குறையல்ல! சக்கர நாற்காலி அசிங்கமல்ல!! அந்த வயதிலும் எவ்வளவு சாதித்தார் என்பதே முக்கியம்! மக்கள் போற்றிய தலைவனை மட்டுமின்றி சக்கர நாற்காலி பயன்படுத்தும் அத்தனை மக்களையும் கமல்ஹாசன் அசிங்கப்படுத்தியுள்ளார், இதற்கு பகிரங்கமாக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்!’’என்றும்,


’’இரண்டு முறை ஆட்சி கலைப்பு ஏற்பட்டு மனம் தளராமல் நின்று கட்சியை காப்பாற்றி மறுபடியும் ஆட்சியை பிடித்தவர் அவர்…ஒரு படம் வெளிவரவில்லை என்பதால் நாட்டை விட்டு ஓடி போகிறேன் என்று சொன்ன பேடி நீ!!! இந்த ஆணவம் உனை அழிக்கும் ’’என்று கொந்தளிக்கின்றனர்.