பரபரப்பை ஏற்படுத்திய ’பியாங்’வழக்கு: கொடூரக்காரி காயத்ரிக்கு தண்டனை என்ன?

 

பரபரப்பை ஏற்படுத்திய ’பியாங்’வழக்கு: கொடூரக்காரி காயத்ரிக்கு தண்டனை என்ன?

மூன்று வயது மகனை நல்லபடியாக வளர்த்து படிக்க வைக்க வேண்டும் என்று மியான்மரில் இருந்து சிங்கப்பூருக்கு வீட்டு வேலைக்கு சென்ற பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தி சாப்பாடு போடாமல் சித்திரவதை செய்து அடித்து கொலை செய்த காயத்ரி என்ற கொடூரக்காரிக்கும் அவரது தாய் மற்றும் கணவருக்கும் அதிக பட்ச தண்டனையாக என்ன தண்டனை கிடைக்கும் என்றே உலகம் முழுவதும் எதிர்ப்பார்ப்பு எழுந்திருக்கிறது.

பரபரப்பை ஏற்படுத்திய ’பியாங்’வழக்கு: கொடூரக்காரி காயத்ரிக்கு தண்டனை என்ன?

2015ம் ஆண்டில் மியான்மர் நாட்டில் இருந்து பியாங் இங்கை தனது மூன்று வயது நன்றாக படித்து வைத்து ஆளாக்க வேண்டும் என்பதற்காக சிங்கப்பூரி இந்திய வம்சாவளிப்பெண் காயத்ரி வீட்டிற்கு வீட்டு வேலைகள் செய்ய சென்றிருக்கிறார்.

வீட்டுக்குசென்றதுமே போனை பிடிங்கி வைத்துக்கொண்டாராம் காயத்ரி. சாதம் என்பதையே கண்ணில் காட்டமாட்டாராம். காய்ந்து போன ரொட்டி துண்டுகள்தான் தருவாராம். ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் மட்டுமே தூங்க வேண்டும் என்று கட்டளை போட்டிருக்கிறார். சரியாக வேலை செய்கிறாரா என்பதை கண்காணிக்க கேமரா வைத்திருந்திருக்கிறார்.

சாப்பிட்டுவிட்டு குப்பைத்தொட்டியில் போடுவதையாவது எடுத்து திண்ண முயன்றிருக்கிறார். அதையும் தடுத்து அடித்து உதைத்து சாப்பிடுவதை தடுத்திருக்கிறார் காயத்ரி.

பரபரப்பை ஏற்படுத்திய ’பியாங்’வழக்கு: கொடூரக்காரி காயத்ரிக்கு தண்டனை என்ன?

இஸ்திரி பெட்டியால் உடல் முழுவதும் சூடு வைத்திருக்கிறார். பசியாலும், தூக்கம் இல்லாததலும், சித்திரவதையாலும் உடல் மெலிந்து வெறும் 24 கிலோ எடைக்கு வந்துவிட்டார் பியாங்.

கொஞ்சமும் ஈவு இரக்கமில்லாத கொடூரக்காரி காயத்ரி, ஈரத்துணியுடன் நெடுநேரம் பியாக்கை நிற்க வைத்து, வயிற்றில் எட்டி உதைத்திருக்கிறார். வலியால் துடித்த பியாங் அப்படியே தரையில் சுருண்டு விழுந்துவிட்டார். மறுநாள் காலையில் அசைவற்று கிடந்த பியாங்கை, காலால் எட்டி உதைத்து எழுப்பி இருக்கிறார் காயத்ரி.

பியாங் எழுந்திருக்கவில்லை என்றதும் மருத்துவருக்கு போன் போட, அவர் வந்து பார்த்துவிட்டு இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். பிரேதபரிசோதனை அறிக்கையிலும், பியாங்கை கவனிக்க வைத்திருந்த கேமரா காட்சிகள் மூலமாகவும் காய்த்ரி செய்த கொடுமைகளும், அதற்கு தாயும், கணவரும் உடைந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

கர்ப்பமாக இருந்ததால் மன உளைச்சலில் காயத்ரி அப்படி செய்துவிட்டதாக கேவலமான வாதத்தை முன்வைத்திருக்கிறார் வழக்கறிஞர். ஆனால், நீதிபதி அந்த வாதத்தை ஏற்கவில்லை. விரைவில் தீர்ப்பு வரவிருக்கிறது. பியாங்கின் கொடுமை வீடியோக்கள் உலகம் முழுவதும் வைரலாகி இருப்பதால், ஒரு ஏழை தாய்க்கு நேர்ந்த கதிக்கு நீதி என்ன என்று உலகம் முழுவதும் இந்த தீர்ப்பினை எதிர்நோக்குகிறார்கள்.