இனி இந்தப் பிழை எந்த வடிவத்திலும் நேரக்கூடாது.. வைரமுத்து வேண்டுகோள்

 

இனி இந்தப் பிழை எந்த வடிவத்திலும் நேரக்கூடாது.. வைரமுத்து வேண்டுகோள்

சி.பி.எஸ்.,இ. 8ம் வகுப்பு பாட புத்தகத்தில் திருவள்ளுவர் குறித்த சர்ச்சை வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. திருவள்ளுவர் புகைப்படம் தலையில் முடி இல்லாமல் வழுக்கை தலையுடன் உச்சியில் குடுமி வைத்து, காவி உடை அணிந்து கோவில் குருக்கள் போன்ற தோற்றத்தில் இருந்தார். இந்த புகைப்படம் தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இனி இந்தப் பிழை எந்த வடிவத்திலும் நேரக்கூடாது.. வைரமுத்து வேண்டுகோள்

’’CBSE 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் அய்யன் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம்! பா.ஜ.க. அரசு அனுமதிக்கிறது; அடிமை அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கிறது. ஆரிய வித்தைகளை எம் தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது; மானமுள்ள தி.மு.க. பொறுக்காது. எச்சரிக்கை!’’ என்று கண்டம் தெரிவித்திருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில்,

’’உலகப் பொதுமறை திருக்குறள்;
உலகப் பொதுமனிதர் திருவள்ளுவர்.

அவருக்கு
வர்ண அடையாளம் பூசுவது
தமிழ் இனத்தின் முகத்தில்
தார் அடிப்பது போன்றது.

ஏற்றுக்கொள்ள முடியாது.
திருத்துங்கள்; இல்லையேல்
திருத்துவோம்’’ என்று கவிஞர் வைரமுத்து கண்டம் தெரிவித்திருந்தார்.

அந்த தவறு திருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால்,

இனி இந்தப் பிழை எந்த வடிவத்திலும் நேரக்கூடாது.. வைரமுத்து வேண்டுகோள்

’’பாடப் புத்தகத்தில் மரபுக்கு மாறாகத்
தீட்டப்பட்ட திருவள்ளுவர் ஓவியம்
திருத்தப்படும் என்று
மேக்மில்லன் பதிப்பகம்
அறிவித்திருப்பதை வரவேற்கிறோம்;
நன்றி தெரிவிக்கிறோம்.

இனி இந்தப் பிழை எந்த வடிவத்திலும்
நேரக்கூடாது என்று
நேர்மையாக வேண்டுகிறோம்.’’ என்று தெரிவித்திருக்கிறார் வைரமுத்து.