ஆந்திர சாலைகளில் சைக்கிளிங் போகும் அஜித்

 

ஆந்திர சாலைகளில் சைக்கிளிங் போகும் அஜித்

பைக் ரேசரான நடிகர் அஜித்குமார் வீரம் படம் ஷூட்டிங் புனேவில் நடந்தபோது, அப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு புனேவில் இருந்து சென்னை வரைக்கும் 1300 கிலோ மீட்டர் தூரம் பைக்கிலேயே பயணம் செய்தார். ஹெல்மெட் விழிப்புணர்வை ஏற்படுத்த தான் அவ்வாறு செய்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆந்திர சாலைகளில் சைக்கிளிங் போகும் அஜித்

தற்போது வலிமை படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலையில் ஆந்திரா சாலைகளில் சைக்கிளிங் சென்றிருக்கிறார் அஜித்.

ஆந்திர சாலைகளில் சைக்கிளிங் போகும் அஜித்

பொதுவெளியில் அவர் தன்னை காட்டிக்கொள்ள விரும்புவதில்லை. ஹெல்மெட் அணிந்துகொண்டுதான் அவர் சைக்கிளிங் சென்றிருக்கிறார். அப்படி இருந்து அஜித்தை அடையாளம் கண்டுகொண்டு போட்டோ எடுத்து இணையங்களில் போட்டுவிட்டார்கள். அவை வைரலாகிறது.

ஆந்திர சாலைகளில் சைக்கிளிங் போகும் அஜித்

கடந்த சில தினங்களுக்கு முன்பு துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக சென்னை ரைபிள் கிளப்பிற்கு சென்றவர், தவறி கமிஷனர் அலுவலகத்திற்குள் நுழைந்துவிட்டார். அஜித்த கமிஷனர் அலுவலகத்தில் பார்த்ததால் பலரும் அதிர்ந்தனர். இதனால் பரபரப்பு எழுந்தது. பின்னர் அவரை ரைபிள் கிளப்பிற்கு அழைத்துச்சென்றனர். ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் இருப்பதை தெரிந்துகொண்ட ரசிகர்கள் அங்கே கூடிவிட்டனர். ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிவிடவே அதற்கு மேலும் அங்கிருந்தால் சரியாக இருக்காது என்பதை உணர்ந்த அஜித், பயிற்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டு எஸ்கேப் ஆனார்.