சீமானை விட்டு விலகி புதிய கட்சி தொடங்கிய மன்சூர் அலிகான்

சீமானை விட்டு விலகி புதிய கட்சி தொடங்கிய மன்சூர் அலிகான்

நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வந்த நடிகர் மன்சூர் அலிகான், அக்கட்சியில் இருந்து விலகி, ’ தமிழ் தேதிய புலிகள்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

சீமானை விட்டு விலகி புதிய கட்சி தொடங்கிய மன்சூர் அலிகான்

ராஜீவ்காந்த் சீமானிடம் இருந்து விலகி திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். அதே போல் கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்தார். நாம் தமிழர் கட்சியில் காரசாரமான பேச்சுக்களை பேசும் மன்சூர் அலிகானும் விலகி புதிய கட்சியை தொடங்கி இருப்பது நாம் தமிழர்கள் க்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சீமானை விட்டு விலகி புதிய கட்சி தொடங்கிய மன்சூர் அலிகான்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிசார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார் மன்சூர் அலிகான். ஆனாலும், அவரின் வித்தியாசமான பிரச்சாரங்கள் ஊடகங்களிலும் சமூக வலைத்தங்களிலும் முக்கிய இடம்பிடித்தன.

சீமானை முதல்வர் ஆக்க வேண்டும் என்று தீவிர பிரச்சாரம் செய்து வந்த அவர், சீமான் மீதான அதிருப்தியில் அவரிடம் இருந்து விலகி, புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார்.

சீமானை விட்டு விலகி புதிய கட்சி தொடங்கிய மன்சூர் அலிகான்

சட்டமன்ற தேர்தலில் சீமான் எனக்கு தொகுதி ஒதுக்கவில்லை. அதனால் நான் வெளியேறினேன் என்று தெரிவித்துள்ளார் மன்சூர் அலிகான். மேலும், தனது புதிய கட்சி, நாம் தமிழர் கட்சிக்கு எந்த விதத்திலும் போட்டியான கட்சி அல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்.