அமமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

 

அமமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழுகூட்டம் தொடங்கியது. காணொளி மூலம் நடைபெறுகிறது இந்த கூட்டம்.

அமமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

ராயப்பேட்டையில் தலைமை அலுவலகத்தில் கட்சியின் துணை தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் அமமுகவினை எவ்வாறு முன்னெடுத்துச்செல்வது என்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

நேற்று ஜெயலலிதாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் ஜெ., படத்திற்கு மரியாதை செய்தார் சசிகலா. அப்போது இயக்குநர்கள் பாரதிராஜார், அமீர், நாம் தமிழர் கட்சியின் சீமான், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார், விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் சசிகலாவை பார்த்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினர்.

அமமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

அம்மாவின் விசுவாசிகள் அனைவரும் தன் பக்கம் வரவேண்டும் என்றும் நேற்றைய தினம் அறிவித்தார் சசிகலா.

இந்நிலையில் இன்றைய தினம் நடைபெறும் செயற்குழு – பொதுக்குழுவினை பலரும் எதிர்ப்பார்ப்புடன் நோக்குகின்றனர்.