ராகுலுடன் பாதுகாப்பு அதிகாரியும் கடலில் குதித்தார்

ராகுலுடன் பாதுகாப்பு அதிகாரியும் கடலில் குதித்தார்

கேரள மாநிலத்தின் வயநாடு எம்.பி. ராகுல்காந்தி இரண்டு நாள் பிரச்சார பயணமாக கேரளா சென்றார். முதல் நாளில் விவசாயிகளுடன் 9 கிலோ மீட்டர் தூரம் டிராக்டர் ஓட்டிச்சென்றார். மறுநாள் மீனவர்களுடன் கடலில் பயணம் செய்து நடுக்கடலில் வலைவீசி மீன்பிடித்தார்.

ராகுலுடன் பாதுகாப்பு அதிகாரியும் கடலில் குதித்தார்

வலைவீசிய ராகுல்; ஒரு மீன் மட்டுமே சிக்கியது

மீனவர்களுடன் காலை 5.15 மணிக்கு கடலிக்ல் இறங்கிய ராகுல், 7.45 மணிக்கு கரைக்கு திரும்பினார். நடுக்கடலில் சென்று மீனவர்களுடன் வலை வீசினார். இதில் ஒரு மீன் மட்டுமே சிக்கியது. ஒரு மீனாவது சிக்கியதே என்று அவர் மகிழ்ச்சி அடைந்தார்.

ராகுலுடன் பாதுகாப்பு அதிகாரியும் கடலில் குதித்தார்

மீன் பிடித்துவிட்டு போட்டில் இருந்து கடலில் குதித்தார் ராகுல். அவருடன் பாதுகாப்பு அதிகாரியும் கடலில் குதித்தார். 10 நிமிடங்கள் கடலில் நீந்தியபின்னர் படகில் ஏறினார்.

ராகுலுடன் பாதுகாப்பு அதிகாரியும் கடலில் குதித்தார்

படகில் உடை மாற்றிக்கொண்ட பின்னர், மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’சுவையான மீன் உணவுக்கு பின்னார்ல் இந்தனை சிரமங்கள், இத்தனை ஆபத்துகள் இருக்கின்றன என்பதை உணர்ந்தேன். மீனவர்களின் பிரச்சனைக்கு முடிந்தவரையிலும் தீர்வு காண முயற்சி செய்வேன்’’என்றார்.

ராகுலுடன் பாதுகாப்பு அதிகாரியும் கடலில் குதித்தார்