சென்னைக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

 

சென்னைக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். காலை 10.25 மணிக்கு அவர் சென்னை விமான நிலையம் வருகிறார். தமிழகத்தில் கோவை மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க பிரதமர் வருகிறார்.

சென்னைக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி தமிழகத்தில் 12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார். இதற்காக இன்று மாலை கோவை வருகிறார். கோவை கொடிசியா மைதானத்தில் இதற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. காலை 7. 45 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து புறப்பட்ட மோடி காலை 10 .25 மணிக்கு சென்னை வருகிறார்.

சென்னைக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் புதுச்சேரி செல்கிறார். அம்மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மாலை 3. 35 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு வருகிறார். கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று 12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார் மோடி.

நெய்வேலியில் புதிய அனல் மின் திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மேலும், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் திருப்பூர் வீரபாண்டியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டிய 1280 குடியிருப்புகள், திருக்குமரன் நகரில் கட்டப்பட்ட 1248 குடியிருப்புகள், மதுரை ராஜாக்கூரில் கட்டப்பட்ட ஆயிரத்து 88 குடியிருப்புகள், திருச்சி இருங்கலூரில் கட்டப்பட்ட 1088 குடியிருப்புகளை தொடங்கி வைக்கிறார்.

மேலும், மதுரை, கோவை, தஞ்சை, திருச்சி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 9 ஸ்மார்ட் நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையங்களை அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட இருக்கிறார்.

கோவை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அங்கிருந்து டெல்லி செல்கிறார் பிரதமர் மோடி.