2200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னையில் இல்லை – எவ்வாறு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவார்கள்?

 

2200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னையில் இல்லை – எவ்வாறு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவார்கள்?

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வேண்டிய 2200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னையில் இல்லை.

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வேண்டிய 2200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னையில் இல்லை.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக நாடு முழுக்க கொரோனா தொற்றுநோய் பரவியதால் ஊரடங்கு காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

ttn

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குவதற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், சென்னையில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 2,200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு இல்லை. கொரோனா பரவல் அச்சம் காரணமாக அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அல்லது ஆந்திரா, ஒடிசா, ராஜஸ்தான் போன்ற தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். அதேபோல பல ஆசிரியர்களும் கூட தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். அப்படி இருக்கையில் இத்தகைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எவ்வாறு பொதுத் தேர்வுக்கு வர முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சரியான நேரத்தில் அவர்களை மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மாநில அரசு மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.  சென்னையில் ஜூன் 1 முதல் 12 வரை 569 பள்ளிகளைச் சேர்ந்த 49,394 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர். ராஜஸ்தான், ஆந்திரா மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்கள் கொரோனா அச்சம் காரணமாக தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.