அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள்?

 

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள்?

சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள்?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சூழலில் அதிமுக – பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு, துணை முதல்வர் ஓபிஎஸையும் சந்தித்துள்ளனர். ஏற்கனவே சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று இரட்டை இலக்கத்தில் சட்டமன்றத்தில் நுழைவோம் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ள நிலையில் இரட்டை இலக்கத்தில் தொகுதி ஒதுக்கீடு நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள்?

இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் துணை முதல்வரை தனித்தனியே சந்தித்து பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இவ்வாறு தகவல் வெளியாகியுள்ளது. கிஷன் ரெட்டி, சி.டி. ரவி ,எல்.முருகன், வி.கே. சிங் உள்ளிட்டோர் பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் முடிவு எட்டப்பட்டதாக தெரிகிறது.