சென்னையில் ஒரே நாளில் 22 பேர் கொரோனாவால் பலி!

 

சென்னையில் ஒரே நாளில் 22 பேர் கொரோனாவால் பலி!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 3,645 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,622ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்குப் பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வந்து கொண்டிருப்பினும், இந்த மாத தொடக்கத்தில் இருந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கொரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள இடமான சென்னையில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 30 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழக்கின்றனர்.

சென்னையில் ஒரே நாளில் 22 பேர் கொரோனாவால் பலி!

இந்த நிலையில் சென்னையில் நேற்று முதல் இன்று காலை 9 மணி வரையில் 22 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேரும்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேரும் ஓமந்தூரார் மருத்துவமனையில் 6 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனாவால் மரணங்கள் தொடருவது சென்னைவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.