பாஜகவுக்கு குமரி தந்த 2 எம்.எல்.ஏக்கள்

 

பாஜகவுக்கு குமரி தந்த 2 எம்.எல்.ஏக்கள்

சட்டமன்றத்திற்குள் பாஜக எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் செல்லவிருக்கிறார்கள் என்பதால் பாஜக வட்டாரம் உற்சாகத்தில் இருக்கிறது. கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், மொடக்குறிச்சியில் சி.கே.சரஸ்வதி, நாகர்கோயிலில் எம்.ஆர்.காந்தி, திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் ஆகியோர் பாஜக வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றி வாகை சூடியிருக்கிறார்கள். இதில், காந்தியின் வெற்றிதான் அதிக கவனம்பெற்றிருக்கிறது.

பாஜகவுக்கு குமரி தந்த 2 எம்.எல்.ஏக்கள்

இதில் குமரி தொகுதியில் வென்ற எம்.ஆர்.காந்தி, 6 சட்டமன்ற தேர்தல்களில் தோற்று 7வது முறையாக 2021 தேர்தலில் போட்டியிட்டு வென்றிருக்கிறார். 1980ல் தொடங்கிய போராட்டத்திற்கு 2021ல் வெற்றி கிடைத்து தனது 75ஆவது வயதில் சட்டமன்றத்திற்குள் செல்கிறார்.

1980,1984,1989,2006,2011,2016 ஆகிய 6 சட்டமன்ற தேர்தலில்களில், கன்னியாகுமரி தொகுதியில் 2 முறையும், நாகர்கோயில் தொகுதியில் 3 முறையும், குளச்சல் தொகுதி்யில் ஒரு முறையும் போட்டியிட்டு தோல்வியை கண்ட எம்.ஆர்,காந்தி, 2021 சட்டமன்ற தேர்தலில் தனது தொடர் முயற்சி்யில் 7வது முறையாகவும், நாகர்கோயில் தொகுதியில் 4வது முறையாகவும் போட்டியிட்டார் காந்தி.

பாஜகவுக்கு குமரி தந்த 2 எம்.எல்.ஏக்கள்

கருத்துக்கணிப்புகளில் காந்தி வெற்றி வாய்ப்பினை இழப்பார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், 74058 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜனை 11,669 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

எம்.ஆர்.காந்தியுடன் சேர்த்து குமரி மண் இதுவரைக்கும் பாஜகவுக்கு இரண்டு எம்.எல்.ஏக்களை தந்திருக்கிறது. 1996 தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய சி. வேலாயுதம் வெற்றி பெற்றுள்ளார். அதற்கு அடுத்து 2021ல் எம்.ஆர்.காந்தி வெற்றி பெற்றிருக்கிறார்.