சசிகலாவிடம் சேர அலைபாயும் 2 அமைச்சர்கள்!

 

சசிகலாவிடம் சேர அலைபாயும் 2 அமைச்சர்கள்!

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் கடந்த நான்கு வருடங்களாக அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தண்டைக்காலம் முடிந்து வரும் ஜனவரி 27ம் தேதி அன்று விடுதலை ஆகிவிடுவார் என்று தெரிகிறது.

அபராத தொகை 10 கோடியையும் செலுத்திவிட்டதால் சசிகலாவின் விடுதலை உறுதியாகி இருக்கிறது. மேலும், சசிகலா விடுதலை ஆகும் நாள் அன்று சிறைத்துறையும், கர்நாடக அரசும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து உளவுத்துறை விடுத்துள்ள அறிக்கையின்னாலும் சசிகலாவின் விடுதலை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சசிகலாவிடம் சேர அலைபாயும் 2 அமைச்சர்கள்!

சசிகலா விடுதலை செய்யப்படும்போது அவரை அழைத்துச்செல்ல அவரது ஆதரவாளர்களூம், தொண்டர்களும் குவியலாம். இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆகவே, அவர்களை மாநிலத்தின் எல்லையிலேயே தடுத்தி நிறுத்திவிட வேண்டும். மேலும், பாதுகாப்பு காரணம் கருதி, மற்ற கைதிகளை போல் இரவு 7 மணிக்கு விடுதலை செய்யாமல், இரவு 9.30 மணிக்கு விடுதலை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.

சசிகலாவை கர்நாடக -தமிழக எல்லை அத்திப்பள்ளி வரையிலும் பாதுகாப்புடன் அழைத்துச்செல்ல வேண்டும். அங்கு அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வாகனத்தில் அவரை அனுப்பி வைக்க வேண்டும் என்று உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

அதுமட்டுல்லாமல், சசிகலாவின் விடுதலை தினத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்துகொள்ளலாம் என்றும் உளவுத்துறை அறிவுறுத்தியிருக்கிறது.

சசிகலா விடுதலை உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை பாஜக ஏற்றுக்கொள்ள மறுப்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

சசிகலா விடுதலையாகி வந்தததும், அதிமுகவில் இருந்து எத்தனை பேர் அவர் பக்கம் போகப்போகிறார்கள் என்பதும் பரபரப்பாகவே இருக்கிறது.

சசிகலாவிடம் சேர அலைபாயும் 2 அமைச்சர்கள்!

இந்நிலையில் அதிமுகவின் இரண்டு அமைச்சர்கள் சசிகலா பக்கம் போக அலைபாய்கிறார்கள் என்று சொல்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் சார்பில் நடைபெற்ற தமிழகம் மீட்போம் பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாக உரையாற்றியபோது, அமைச்சர் காமராஜுக்கும், அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கும் மாவட்டத்து மக்களை பற்றி கவலையே கிடையாது. அவர்களின் கவலை எல்லாம், சசிகலா வெளியே வரப்போகிறாரே.. அவரோடு போய்விடலாமா? இல்லை, பழனிச்சாமியோடு இருந்துவிடலாமா என்ற குழப்பத்தில் அமைச்சர்கள் ரெண்டு பேரும் அலைபாய்ந்து வருவதாக கேள்விப்படுகிறேன்.’’என்று தெரிவித்தார்.

மேலும், ’’ இப்படி தங்களை பற்றி மட்டுமே கவலைப்படும இந்த அமைச்சர்கள் பொதுமக்களை எப்படி சிந்திப்பார்கள்?’’ என்ற கேள்வியை எழுப்பினார்.