22 வருட பணிக்குப்பிறகும், முத்தூட் ஃபைனான்ஸ் ஊழியர் பெறும் சம்பளம் 16,000 மட்டுமே!

 

22 வருட பணிக்குப்பிறகும், முத்தூட் ஃபைனான்ஸ் ஊழியர் பெறும் சம்பளம் 16,000 மட்டுமே!

1997ல் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து பணியில் இருக்கும் கிரீஷ் குமார் என்பவருக்கு இன்றைய தேதியில் மாத சம்பளம் 16,000 மட்டுமே. இரண்டாயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டும் கம்பெனியில் கிரிஷ்குமார்போல், சொற்ப சம்பளத்துக்கு இன்னமும் பணியாற்றிக்கொண்டிருக்கும் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒன்றுசேர்ந்து கேரளாவில் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் துவங்கிவிட்டார்கள்.

2018-19ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் மட்டும் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 1972 கோடி ரூபாய். மொத்த வருவாய் 9% உயர்ந்து 6881 கோடி ரூபாயாகவும், நிலுவையில் இருக்கும் தங்க கடன் அளவு 33,585 கோடி ரூபாயாகவும் உள்ளது. ஆனால், 1997ல் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து பணியில் இருக்கும் கிரீஷ் குமார் என்பவருக்கு இன்றைய தேதியில் மாத சம்பளம் 16,000 மட்டுமே. இரண்டாயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டும் கம்பெனியில் கிரிஷ்குமார்போல், சொற்ப சம்பளத்துக்கு இன்னமும் பணியாற்றிக்கொண்டிருக்கும் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒன்றுசேர்ந்து கேரளாவில் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் துவங்கிவிட்டார்கள்.

Muthoot Employees on strike

கேரளாவையும் மழையையும் எப்படி பிரிக்க முடியாதோ அதேபோல், போராட்டங்களையும் பிரிக்க முடியாதல்லவா? காலவரையற்ற போராட்டத்தில் நிறுவனத்தின் மண்டல அலுவலகம் எதிரே ஆகஸ்ட் 20ஆம் தேதிமுதல் உட்கார்ந்துவிட்டார்கள். முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் நலச்சங்கம் என யூனியன் ஆரம்பித்தபோதே 50 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், யூனியனின் தொடர் எதிர்ப்பிற்குப் பிறகு அவர்கள் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டாலும், வெவ்வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இப்போதும் அதே மிரட்டல் தொனியை முத்தூட் நிறுவனம் கையாளப் பார்க்கிறது. ”நாடு முழுவதும் 1000 கிளைகளுக்கு மேல் செயல்பட்டு வந்தாலும், கேரளாவில் எங்களுக்கு 4.5%தான் கிளைகள் உள்ளது, ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால், அந்த கிளைகளை மூடிவிடுவோம்” என முத்தூட் நிறுவனம் மிரட்டல் விடுத்துவருகிறது. ஆனாலும் அஞ்சாத தொழிலாளர்கள் இன்றோடு 15ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!