22 வருட சாதனையை தகர்த்தெறிந்த ஹிட்மேன் ரோகித்!

 

22 வருட சாதனையை தகர்த்தெறிந்த ஹிட்மேன் ரோகித்!

வெஸ்ட் இண்டீஸ்  அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய அணியின் துவக்க வீரரான ரோஹித் சர்மா 22 வருட சாதனையை உடைத்தெறிந்து புதிய உலகசாதனையை படைத்துள்ளார்.

இந்தியா சுற்றுப்பயணம் வந்த விண்டீஸ் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் முதல் கட்டமாக நடந்த டி20 தொடரை இந்திய வென்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்றது.

rohit

இதில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில், கோப்பையை வெல்லும் அணியை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

paytm

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த விண்டீஸ் அணிக்கு, நிக்கோலஸ் பூரான் 89 ரன்களும், ஷாய் ஹோப் 42 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த விண்டீஸ் அணி 315 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோஹித் சர்மா 63 ரன்களும், கே.எல் ராகுல் 77 ரன்களும், விராட் கோஹ்லி 85 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் 48.5 ஓவரிலேயே இலக்கை அடைந்த இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

virat

இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரரான ரோஹித் சர்மா 22 ரன்களை எடுத்த போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு ஆண்டில் அதிக ரன்கள் அடித்த துவக்க வீரர்கள் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜெயசூர்யாவை (2387 ரன்கள், 1997 ஆம் ஆண்டு), பின்னுக்கு தள்ளி ரோஹித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.