22 தொகுதியிலும் தோற்றாலும் அ.தி.மு.க.ஆட்சி தொடருமாம்…அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தெர்மாகோல் கணக்கு…

22 தொகுதியிலும் தோற்றாலும் அ.தி.மு.க.ஆட்சி தொடருமாம்…அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தெர்மாகோல் கணக்கு…

’நடைபெற்ற 18, நடைபெற இருக்கிற 4 ஆகிய 22 தொகுதிகளிலுமே அ.தி.மு.க. தோற்றாலும் எடப்பாடி ஆட்சிக்கு ஆபத்து இல்லை’ என்று தெர்மாகோல் பாணி கணக்கு ஒன்று போடுகிறார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

’நடைபெற்ற 18, நடைபெற இருக்கிற 4 ஆகிய 22 தொகுதிகளிலுமே அ.தி.மு.க. தோற்றாலும் எடப்பாடி ஆட்சிக்கு ஆபத்து இல்லை’ என்று தெர்மாகோல் பாணி கணக்கு ஒன்று போடுகிறார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

ops

சட்டசபை இடைத்தேர்தலில் பத்தில் ஜெயித்தால் என்ன கணக்கு, எட்டில் ஜெயித்தால் என்ன கணக்கு, இருக்கிற எம்.எல்.ஏ.க்களில் எத்தனை பேரை பதவி நீக்கம் செய்யவேண்டும்? என்று எடப்பாடி முதல் பிரதமர் மோடி வரை சட்டையைப் பிய்த்துக்கொண்டிருக்கும் நிலையில் ’தி.மு.க.வுல இருந்து 40 எம்.எல்.ஏ.க்கள் நாங்கள் கண் அசைத்தாலே வரத் தயாராக இருக்கிறார்கள்’ என்று அசால்ட்டு செய்கிறார் ராஜேந்திர பாலாஜி.

rajendra baalji

ஒட்டப்பிடாரம் தொகுதியில் இன்று பிரச்சாரத்திற்கு மத்தியில் நிருபர்களிடம் பேசிய அவர்,’ஸ்டாலின் புறக்கடை வழியாக அரசியல் பண்ண நினைக்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் பலிக்காது. கருணாநிதி மறைவுக்குப் பின்னால் தி.மு.க.வில் யாரும் மனதளவில் திருப்தியாக இல்லை. ஸ்டாலின் தலைமையை யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

stlain

நாங்கள் காசு பணம் செலவு பண்ணவேண்டியதில்லை. எடப்பாடி  சும்மா கண் அசைத்தாலே 40 எம்.எல்.ஏ.க்கள் வரை எங்களோடு வரத் தயாராக இருக்கிறார்கள்.எங்கள் மீது ஸ்டாலின் சில கற்களை எறிந்தால் பதிலுக்கு அவர் மீது பல கற்கள் விழும்.ஜாக்கிரதை’ என்று பலமாக எச்சரித்தார்.