பிக் பாஸ் ஜோசியர்… டார்லிங் அசுரன்… குழந்தை டாக்டர் – யார் யார்னு தெரிஞ்சுக்கணுமா? #BiggBoss4

 

பிக் பாஸ் ஜோசியர்… டார்லிங் அசுரன்… குழந்தை டாக்டர் – யார் யார்னு தெரிஞ்சுக்கணுமா? #BiggBoss4

CSK  ஜெயிச்சிருக்கு… அதுவும் பெங்களூரைத் தோற்றகடித்திருக்கிறது… செம ஹேப்பியில் சென்னை ரசிகர்கள் இருக்க, அதே மூடில் கமல்ஹாசனும் நேற்றைய நிகழ்ச்சிக்கு வந்திருப்பார் போல. முகத்தில் எப்போதும்போல பிரகாசம்… அப்பப்போ.. டைமிங் மிஸ் பண்ணாத ஒன் லைன் பன்ச்களோடு ரொம்ப உற்சாகமாக நிகழ்ச்சியைக் கொண்டு சென்றார். வெல்கம் பேக் சாரே!

பிக் பாஸ் ஜோசியர்… டார்லிங் அசுரன்… குழந்தை டாக்டர் – யார் யார்னு தெரிஞ்சுக்கணுமா? #BiggBoss4

பிக்பாஸ் 21 –ம் நாள்

‘நானே ஏற்கெனவே பாவம்’ என்பதுபோல அனிதா ‘நேற்று அவரை ரிஜெக்ட் பண்ணினவர்களைப் பற்றி ஆரியிடம் அணத்திக்கொண்டிருந்தார். ‘இங்க மட்டும் என்ன வாழுதாம்’ என, ‘என்னை வெளியேற்ற நாலு பேர் கொண்ட குழு அமைச்சிருக்காங்க’ என சீக்ரெட் சொல்லிக்கொண்டிருந்தார் ஆரி. ‘நான் அணத்தினா… கேக்கணும். பதிலுக்கு அணத்தக்கூடாது’ என்று ஆரியை ரிலீஸ் பண்ணி, ரியோவிடம் வந்தார் அனிதா.

’அர்ச்சனா என்னை முறைச்சிட்டே போனாங்க… ஏன்னு தெரியல’னு அடுத்த அணத்தலைத் தொடங்க, ‘அர்ச்சனாவே முறைச்சிட்டாங்களா… அப்ப அதுல ஒரு காரணம் இருக்கும்’ என்பதாகச் சொல்லி நழுவினார்.

பிக் பாஸ் ஜோசியர்… டார்லிங் அசுரன்… குழந்தை டாக்டர் – யார் யார்னு தெரிஞ்சுக்கணுமா? #BiggBoss4

‘இவங்க எல்லாம் எதுக்கு… நாட்டாமை டூ பங்காளி என இந்த பிரச்சனையை டீல் செஞ்சுக்கிறேன் ’ என அனிதா நேராக அர்ச்சனாவிடமே சென்று, முறையிட்டதும், கண்கள் பனிக்க, கட்டியணைத்துக்கொண்டார் அர்ச்சனா.

கமல் வருகை

நேரடியாக ஆயுதபூஜைக்கு வாழ்த்தெல்லாம் சொல்லமாட்டேன்… விடுமுறை தின வாழ்த்துகள் என்று வேணா சொல்றேன் என்பதுபோல சுற்றி வளைத்து ஆயுத பூஜை வாழ்த்துகளைச் சொன்னார். பல கருவிகள் இந்தியாவில் கண்டுபிடிக்க வில்லை என்பது அவர் சொன்னது பலரும் யோசிக்க வேண்டிய விஷயம்.

கருவிகள் மட்டுமல்ல, கண்டுபிடிப்புகளே இந்தியாவில் குறைந்துபோய்விட்டதாக அறிவுஜீவிகள் சொல்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக, தாய்மொழி கல்வி புறக்கணிப்படுவதைக் குறிப்பிடுகிறார்கள். ஓகே.. கம்மிங் பேக் பிக்பாஸ்.

பிக் பாஸ் ஜோசியர்… டார்லிங் அசுரன்… குழந்தை டாக்டர் – யார் யார்னு தெரிஞ்சுக்கணுமா? #BiggBoss4

அகம் டிவி வழியே வீட்டுக்குள் நுழைந்த கமல், பாலாவின் ட்ரஸ்ஸைப் பார்த்து ஜெர்க்கானார். ‘நாடா… காடா  டாஸ்க் முடிஞ்சிடுச்சு இல்ல’ என்று முதல் துணுக்கோடு தொடங்கினார். பிறகு, சிலரை இடம்மாற்றி உட்காரச் சொன்னபோது ’அனிதாவுக்கு ஸ்பேஸ் கொடுங்க.. அவங்களுக்கு ஸ்பேஸுக்கு போனாலும் ஸ்பேஸ் இல்லன்னு சொல்வாங்க’ என லைட் பன்ச் வைத்தார்.

‘சின்னவங்கள கவனிக்க சிலர், பெரியவங்க தானே அழுத்தமா கருத்தைச் சொல்லிடுறாங்க.. இடையில் நாங்க நாலைஞ்சு பேர் கருத்தைச் சொல்ல முடியாம தவிக்கிறோம்’ என்று ஏற்கெனவே ரெண்டு மூணு முறை சொன்னதை அனிதா ரிப்பீட் செய்ய, ‘எஸ்.பி.பி மாதிரி ஸ்பேஸே விடாம பேசிடுங்க’ என்றதும் நிஷா வாய்விட்ட சிரிக்க, ’இதுக்கு நான் என்ன ரியாக்‌ஷன் காட்டணும்’னு குழப்பத்தோடு பார்த்தார் அனிதா. அதையே, ‘சார் நீங்க என்ன சொன்னாலும் என்னை கலாய்க்கிற மாதிரி இருக்கு’ என்றார். ‘ஓஹோ… அதுவே இப்பதான் தெரியுதா…’ என்ற ரியாக்‌ஷனைக் காட்டிக்கொண்டே, ‘என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க’ என்றார் கமல். நடிப்புகாரர்ன்னா சும்மாவா?

பிக் பாஸ் ஜோசியர்… டார்லிங் அசுரன்… குழந்தை டாக்டர் – யார் யார்னு தெரிஞ்சுக்கணுமா? #BiggBoss4

சுரேஷ் ஓரமாக ஒதுக்கப்பட்ட அது பற்றி விசாரித்த கமலிடம் சுரேஷ் பதில் சொல்லியதைக் கேட்டு, ’ஏலியன் மாதிரியா’ என்றார். அப்போது அவர் ஏதோ சொல்ல… ‘வேணாம் சார்… அது மொக்க ஜோக்’ என்ரு ரம்யா சொன்னது, நல்லவேளையாக அடுத்த ஆளிடம் சென்றார் கமல். (அப்பாடா…)

வேல்முருகன் தனது தயக்கம் பற்றிச் சொல்ல, கமல் வண்டியை கேரளா பக்கம் திருப்பினார். அப்படியே ‘கொஞ்சம் பழைய ஜோக்தான்’ என்று ஒரு ஜோக் சொன்னார். பலருக்கும் தெரிந்த என்சைக்ளோபீடியா ஜோக்தான் அது. பழைய ஜோக்ஸ் தவிர்க்கலாம் ஆண்டவரே!  

’தான் கார்னர் செய்யப்படுவதாக’ அனிதா மீண்டும் ஆரம்பிக்க, ஆரியிடம் பேச்சை நகர்த்தினார் கமல். குழந்தைகள் நல மருத்துவர் (பீடியாட்ரிசன்) மாதிரி இந்த கையில் பொம்மையைக் காட்டிட்டு, இந்தக் கையால குத்த வேண்டிய நேரத்துல சரியா குத்திடுறாங்களே…’ என்று பாராட்டாய் ஒரு கத்தியைக் கமல் உருவ, ‘இவ்வளவு  பப்ளிக்காவா தெரியுது’ என்பது போல சிரித்தே மழுப்பினார் ரம்யா. ஆர்டர் படி 1- ம் நம்பருக்கு பொருத்தமான ஆள்தான்.

பிக் பாஸ் ஜோசியர்… டார்லிங் அசுரன்… குழந்தை டாக்டர் – யார் யார்னு தெரிஞ்சுக்கணுமா? #BiggBoss4

கமல் பிரேக் எடுத்த நேரத்தில், ஆரியும் பாலாவும் சீரியஸாக டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தார்கள். மறுபுறம், ‘நிஷா, ரியோ, வேல், சோம்ஸ் தவிர வேற யாருக்கு எது நடந்தாலும் நான் கேட்கமாட்டேன்’பா என்று முன் ஜாமின் வாங்கிக்கொண்டிருந்தார்.

கமலின் மீள் வருகைக்குப் பிறகு, ஷனமிடருந்து பேச்சு தொடர்ந்தது. ‘ஈஸியா என்னை டார்கெட் பண்றாங்க. எவிக்‌ஷன் ப்ரீ பாஸ் கேம்ல கூட மக்கள் உங்களுக்கு ஓட்டுப்போட்டு, இருக்க வைப்பாங்க’னு சொல்லியே ஒதுக்கிட்டாங்க’ என்ற ஷனமை இடைமறித்து ‘போனா நல்லா இருக்கும்னு நினைக்கிறாங்க போல’ என எண்ணெய்யை ஊற்றினார். ஆனால், அதற்குப் பிறகு, ‘இவங்க கொடுத்த நம்பரை எல்லாம் மறந்துட்டு, உங்க இலக்கை நோக்கி போங்க’ என்று சரியான அறிவுரை …வாய்ல அடி… வாய்ல அடி… டிப் கொடுத்தார் கமல்.

பிக் பாஸ் ஜோசியர்… டார்லிங் அசுரன்… குழந்தை டாக்டர் – யார் யார்னு தெரிஞ்சுக்கணுமா? #BiggBoss4

ஆரி எனப் பேர் வெச்சிட்டு சூடாகுறீங்களே என ஏதோ ரைமிங்கைப் பிடிக்க ட்ரை பண்ணினார் கமல், அது இம்முறை மிஸ்ஸாகிடுச்சு. நாடா… காடா… டாஸ்கில் நேர்மையா விளையாடினதுக்காக அவுட்டாகல… டைம் முடிவதற்குள் அசைந்ததால் தான் அவுட்டானீங்க…’ நேர்மைக்கு என்றைக்குமே மதிப்பு இருக்கு எனச் சொல்லி, காந்தியிடம் ஒரு ரவுண்ட் போய்ட்டு வந்து, ஆரியின் நேர்மை வெல்லும் என்பதற்கு உதாரண… ஆரி எவிக்‌ஷனிலிருந்து சேஃப்’ என்றார் ஒரு வழியாக. எத்தனை நேர்மை. ஹமாம் சோப் விளம்பரம்போல ஒரு நிமிஷம் ஆயிடுச்சு.

‘நாடா… காடா… டாஸ்க் விளையாடினீங்களே… வில்லன்னா அப்படித்தான்… ஹீரோன்னா இப்படி என நினைத்துக்கொள்கிறோம். நாயகனை எடுத்துக்கோங்களேன்…’ என கமல் ஆரம்பித்ததும் ‘எந்த நாயகன் என்பதாகவோ… சுத்தி வளைச்சு எங்க வரபோகிறார் என்பதாகவோ புரிந்துகொள்ளும்படியான ரியாக்‌ஷனைக் காட்ட்டினார் ரம்யா.

பிக் பாஸ் ஜோசியர்… டார்லிங் அசுரன்… குழந்தை டாக்டர் – யார் யார்னு தெரிஞ்சுக்கணுமா? #BiggBoss4

கமல் வண்டியை இம்முறை கைபர் கணவாய் வழியாக, மத்திய ஆசியாவுக்கே கொண்டுபோய்விட்டார். அங்கே ஹீரோ பேர் அசுரனாகவும், வில்லன் பெயர் தேவ் என்பதாக இருந்ததையும் சொல்லிக்கொண்டிருந்தார். (இதை கிண்டலடித்தாலும் லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் இப்படியான டெப்தான விஷயங்களை வேறு யாராலும் பகிர முடியாது என்பதே உண்மை. அதனால்தான், பிக்பாஸ் நிகழ்ச்சியை நெறிபடுத்த வேறு ஒருவரை யோசிக்கவே முடியவில்லை)

கமல் சுற்றி வளைத்து… இப்போ ஸ்டோர் ரூமில் ராஜா கிரீடம், அசுரக் கிரீடம் இருக்கு… யாருக்கு எதைச் சூட்டவேண்டுமோ சூட்டுங்கள் என விஷயத்துக்கு வந்தார். அப்பாடி… நாங்க கூட புதுசா ஏதோ கேம்னு பயந்துட்டு இருந்தோம்னு ஹவுஸ்மேட்ஸ் மைண்ட் வாய்ஸ் கேட்டே விட்டது.

பிக் பாஸ் ஜோசியர்… டார்லிங் அசுரன்… குழந்தை டாக்டர் – யார் யார்னு தெரிஞ்சுக்கணுமா? #BiggBoss4

முதலில் வந்த சுரேஷ், ராணி கிரீடத்தை ரம்யாவுக்கும், அசுரக் கிரீடத்தை பாலாவுக்கும் கொடுத்தார். ’பல அசுரர்கள் யாகம் பண்ணி நல்லவங்களா மாறிட்டாங்க. அதுபோல பாலாவும் மாறணும்’ என்றார் சுரேஷ். என்ன பாஸ்… சுரேஷ்க்கு ஏற்கெனவே ஸ்கிர்ப்ட் கொடுத்திட்டீங்களா?

வேல் முருகனின் ராஜகிரீடம் ரமேஷ்க்கு, அசுர கிரீடம் பாலாவுக்கும் போனது. அனிதா ராஜ கிரீடத்தை ரியோவுக்குச் சூட்டினார். ’ஒரு அண்ணன் போல கவனிச்சிக்கிறார்’ என்க, அசுர கிரீடம் எதிர்பார்த்ததுபோல பாலாவுக்குப் போனது. ஒரு ஆங்கில வார்த்தையைச் சொல்லி அப்படித்தான் ஷிவானி நடந்துகிறாங்க என்றார் அனிதா.

பிக் பாஸ் ஜோசியர்… டார்லிங் அசுரன்… குழந்தை டாக்டர் – யார் யார்னு தெரிஞ்சுக்கணுமா? #BiggBoss4

அந்த வார்த்தை என்னனு புரியல. ஆனால், அர்த்தம், ஒருவர் மீது ஏற்பட்ட கசப்பினால் மீண்டும் மீண்டும் அவரையே டார்கெட் செய்கிறார் என புரிந்துகொண்டேன். (டிப்ளமேசிக்கு… இருக்கு ஆனா இல்ல’ என வேல்ஸ் அர்த்தம் சொன்னதுபோல). ’ஷிவானி செய்வதாகச் சொல்லும் அதே விஷயத்தைத்தானே நீங்க திரும்ப செய்யறீங்க’ கமல் நறுக் பன்ச் தெறிக்க விட, அனிதா ‘அப்ப பொன்மணின்னு வெச்சிக்கலாம் சார்’ என நழுவினார்.  ஆஜித்தின் ராஜ கிரீடமும் ரியோவுக்கே.

‘அர்ச்சனாவின் தாயுள்ளமே பலரின் வேலையைச் செய்ய விடாமல் தடுக்குது’ என கண்ணாடியை திருப்பி ஆட்டோவை ஸ்டார்ட் செய்யும் விதமாக அசுர கிரீடத்தைச் சூட்டினார்.

பிக் பாஸ் ஜோசியர்… டார்லிங் அசுரன்… குழந்தை டாக்டர் – யார் யார்னு தெரிஞ்சுக்கணுமா? #BiggBoss4

அனிதாவின் மரியாதைக்கு அதே வகையில் பதில் மரியாதை செய்தார் ஷிவானி. ஆம். அசுர கிரீடத்தை அனிதாவுக்குச் சூட்ட ஜெர்க்கானார். ஷிவானி ராஜ கிரீடம் சூட்டியது சம்யுக்தாவுக்கு. ஸ்மார்ட் மம்மி போல இருக்காங்க என்றதும், ’இச்’ கொடுத்து கிரீடம் சூடிக்கொண்டார் சம்யுக்தா. (சோஷியல் மீடியாவில் சம்யுக்தாவின் பழைய டான்ஸ் வீடியோக்கள் ஷேராகிட்டு இருக்கு – ஒரு தகவலுக்கு)

ராஜ கிரீடம், அசுர கிரீடம் இரண்டையும் பாலாவுக்கே கொடுத்து ஆங்காங்கே பேசியதை ஒருங்கிணைத்து நீண்ட சொற்பொழிவை நிகழ்த்த டயர்டானார் கமல். ‘கோல்டன் ஹார்ட்’ நிஷா எனப் பட்டம் கொடுத்து ராஜ கிரீடத்தை சூட்டினார் சம்யுக்தா. அசுர கிரீடம் சுரேஷ்க்கு. ஆரி. ராஜ கிரீடம் பாலாவுக்கு.

பிக் பாஸ் ஜோசியர்… டார்லிங் அசுரன்… குழந்தை டாக்டர் – யார் யார்னு தெரிஞ்சுக்கணுமா? #BiggBoss4

‘சண்டை போட்டாலும் சாப்பாடு போடுறாங்க’ என அர்ச்சனாவுக்கு ராஜ கிரீடமும், பாலாவுக்கு அசுர கிரீடமும் தந்தார் ரமேஷ். (வீட்ல இருக்கிங்களா பாஸ்)

நிஷா ரியோவுக்கும் நிஷா அர்ச்சனாவுக்கும் ராஜ கிரீடம் சூட்டுவார்கள் என்பது தெரிந்ததே. அர்ச்சனா, ‘டார்லிங் அசுரன்’ பட்டத்தோடு அசுர கிரீடத்தை சுரேசுக்கு சூட்டினார். ராஜகிரீடத்தை சோம்ஸ்க்கு சூட்டினார். (மொளகா பொடியைக் கொட்டினப்ப பார்த்தது… சுகமா இருக்கீங்களா சோம்ஸ்). பதில் மரியாதையை சோம்ஸ் ராஜகிரீடத்தை அர்ச்சனாவுக்குச் சூட்ட, அனிதாவின் ரியாக்‌ஷனைக் காட்டினார் பிக்கி. ரொம்ப குசும்புய்யா உமக்கு.

பிக் பாஸ் ஜோசியர்… டார்லிங் அசுரன்… குழந்தை டாக்டர் – யார் யார்னு தெரிஞ்சுக்கணுமா? #BiggBoss4

கேபி அந்த ராஜகிரீடமே கணித்ததைப் போல பாலாவுக்குச் சூட்டினார். அசுர கிரீடத்தை அனிதாவுக்குச் சூட்ட, முகம் இறுகியது.

இறுதியாக, பாலா ராஜ கிரீடம் சூட்டியது ரியோவுக்கு. ‘எப்படித்தான் நாலைஞ்சு பேரின் அன்பை சம்பாதிச்சானோன்னு தெரியல…’ என பொறாமையில் சொல்லிக்கொண்டு சூட்டியபோது, ‘குத்தாம வைங்க’ என நச் ’பன்ச்’ கமலிடமிருந்து வர, ‘குத்திடுச்சு’ என ரியோ அழகாக சிக்ஸருக்கு விளாசினார்.

டிஜிட்டல் பார்வையாளர்களுக்கு நன்றி வணக்கம் சொல்வதற்கு முன், ப.சிங்காரம் எழுதிய ’புயலிலே ஒரு தோணி’ நாவலை அறிமுகப்படுத்தினார். உண்மையிலே தமிழில் எழுதப்பட்ட மகத்தான நாவல். அதை லட்சணக்கானவர்களுக்கு தெரியப்படுத்தியதற்கு கமலுக்கு ஒரு சபாஷ் போடலாம்.

பிக் பாஸ் ஜோசியர்… டார்லிங் அசுரன்… குழந்தை டாக்டர் – யார் யார்னு தெரிஞ்சுக்கணுமா? #BiggBoss4

அடுத்து எவிக்‌ஷன். ‘ஆஜித் நீ சரியா கணிக்கிறியாமே…’ என கமல் இழுத்தபோதே முடிவு தெரிந்துவிட்டது. ‘ஆமா சார்.. நான் சும்மா சொன்னேன். அதுக்காக ஜோசியர் ரேஞ்ச்க்கு கொண்டு போய்ட்டாங்க’ என எவிக்‌ஷன் பயத்தில் முணகினார். இம்முறையும் சரியாகவே கணித்துவிட்டீர்கள் என அவர் பெயர் எழுதிய எவிக்‌ஷன் கார்டைக் காட்டினார் கமல். எவிக்‌ஷன் ப்ரீ பாஸைப் பயன்படுத்தி, எவிஷனலிருந்து தப்பித்துக்கொண்டார் ஆஜித்.

அடுத்து, கேப்டன் யார் எனும் டாஸ்க். அதில் கலந்துகொள்ள பாலா, ஷனம், அர்ச்சனா மூவரும் முன் நின்றார்கள். ’அறிவுபூர்வமான விளையாட்டைத் தரப்போறேன்’ எனச் சொல்லிவிட்டு ‘சா பூ த்ரி’ போட்டு முடிவெடுங்கள் என்றார். சா பூ த்ரியா… அப்படின்னா ஸ்வீட்டா,,, காரமா என ஷனம் கேட்க, அவரை ஆட்டத்திலிருந்து விலக்கினார்.

இருவரில் ஒருவரை கேப்டனாக்க, டாஸ் சுற்றச் சொன்னார். ‘எல்லாத்தையும் உருவிட்டுதானே உள்ளே விட்டிங்க’ என ஒருவர் பொறும, ‘இப்படியெல்லாம் தலைவரை தேர்ந்தெடுக்ககூடாது’ என இந்த வார பாலிடிக்ஸ் பன்ச் கணக்கை நிறைவு செய்தார். ஹவுஸ்மேட்ஸ் வாக்கெடுப்பில் அர்ச்சனாவுக்கு அதிக ஓட்டுகள் கிடைக்க புதிய தலைவரானார்.

பிக் பாஸ் ஜோசியர்… டார்லிங் அசுரன்… குழந்தை டாக்டர் – யார் யார்னு தெரிஞ்சுக்கணுமா? #BiggBoss4

‘சார்… தியேட்டர் எல்லாம் திறந்திட்டாங்களா?’ என்ற ரியோவுக்கு, சட்டென்று ஹோட்டல் சர்வர் போல, ‘அப்பறம் என்ன சொல்லுங்க’ என ஆர்டர் எடுப்பதுபோல கலாய்த்தார் கமல். அதைப் புரிந்துகொண்டு ‘லவ் யூ’ சொல்லி பறக்கும் முத்தங்களை அனுப்பினார் ரியோ.

பிக்பாஸ் வீட்டில் எந்த சீசனில் இல்லாத தங்கச்சி, தம்பி எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதைப் பற்றி இன்னொரு நாளில் விரிவாகப் பார்ப்போம். இன்றைக்கு பிக்பாஸ் நான்கு மணி நேரமாமே!

பிக்பாஸ் பற்றிய முந்தைய பகுதிகளைப் படிக்க கீழ் உள்ளவற்றில் கிளிக் செய்க

ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு | ஐந்து

ஆறு ஏழு | எட்டு | ஒன்பது | பத்து

பதினொன்று பன்னிரெண்டு | பதிமூன்று | பதிநான்கு | பதினைந்து

பதினாறு | பதினேழு | பதினெட்டு | பத்தொன்பது | இருபது