ஜனவரி 21… கட்சி தொடங்க ரஜினி தேர்ந்தெடுத்திருக்கும் தேதி

 

ஜனவரி 21… கட்சி தொடங்க ரஜினி தேர்ந்தெடுத்திருக்கும் தேதி

ரஜினி தனக்கு ராசியான வியாழக்கிழமை அன்றும், 3 எண் வரும் நாளில்தான் மூன்றாம் தேதி அன்று தனது அரசியல் நிலைப்பாட்டினை அறிவித்தார்.

பொதுவாகவே, தனக்கு ராசியான வியாழக்கிழமை, மூன்றாம் எண் வரும் நாட்களில் தான் முக்கிய முடிவுகளை எடுக்கிறார். நவம்பர் 30-ஆம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியவர் டிசம்பர் 3 ஆம் தேதி கட்சி தொடங்கப் போவதாக கூறியுள்ளார்.

ஜனவரி 21… கட்சி தொடங்க ரஜினி தேர்ந்தெடுத்திருக்கும் தேதி

ரஜினியின் பிறந்த நாள் 12.(கூட்டுத்தொகை -3) அந்த அடிப்படையில் மூன்று தான் அவருக்கு ராசியான எண். இது குருவின் எண். அதேபோல் ரஜினிகாந்த் என்ற பெயரின் கூட்டு தொகை 28. மொத்தம் ஒன்று வருகிறது. ஆன்மிகத்தில் ஈடுபட்டு உள்ள பலரும் மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள்தான். அதனால் தான் அவர் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் அவரது மனம் ஆன்மிகத்தை நாடியது என்கிறார்கள்.

ஜனவரி மாதம் கட்சி தொடக்கம் என்று அறிவித்துள்ளதால் எந்த தேதியில் தொடங்குவார் என்ற கணிப்புகள் தோன்றியுள்ளன. அண்ணாத்த படப்பிடிப்பு மற்றும் டப்பிங் வேலைகள் ஜனவரி இரண்டாம் வாரம் வரை நீடிக்கலாம். அதன் பிறகே ரஜினி கட்சியை தொடங்குவார் என்று சொல்லும் மக்கள் மன்ற நிர்வாகிகள், ஜனவரி 21-ஆம் தேதியை ரஜினி கட்சி தொடங்குவதற்கு தேர்வு செய்து வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. 21 என்ற தேதியின் கூட்டுத்தொகை 3 ஆக வருகிறது. அன்று வியாழக்கிழமையாகவும் இருக்கிறது. எனவே ரஜினி இந்த நாளில் தான் கட்சி தொடங்குவார் என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் அடித்துச் சொல்கிறார்கள்.