21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பீர் இலவசம்

 

21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பீர் இலவசம்

கொரோனா தொற்றினால் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, அமெரிக்காதான் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்து வருகிறது.

21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பீர் இலவசம்

அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் நாடு முழுவதும் தீவிர தடுப்பூசி பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகிறார்.

மாடர்னா, பைசர், பையோஎன்டெக், ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்க பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 29,69,12,892 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதுவரைக்கும் அமெரிக்காவில் 16,87,34,435 பேர் முதல் டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டதாகவும், 13,61,55,250 பேர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டதாகவும் அமெரிக்காவின் சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பீர் இலவசம்

வரும் ஜூலை 4ம் தேதி அமெரிக்க சுதந்திர தினம் வருகிறது. அதற்குள் 70 சதவிகித மக்களுக்குக் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்த வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது ஜோ பைடன் அரசு.

இதுவரைக்கும் 63 சதவிகிதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், முழு சதவிகிதத்தை எட்ட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்த மக்களுக்கு ஆர்வம் வரவழைக்க, அமெரிக்காவின் பட்வைசர் பீர் நிறுவனம், குறிப்பிட்ட நாட்களுக்குள் தடுப்பூசி இலக்கு அடையப்பட்டு விட்டால் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பீர் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.