Home அரசியல் ஓபிஎஸ் அறிவிப்பு: சென்னை மக்கள் மகிழ்ச்சி!

ஓபிஎஸ் அறிவிப்பு: சென்னை மக்கள் மகிழ்ச்சி!

சென்னையில் கடந்த 35 வருடங்களில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வகையில் 2019ம் ஆண்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டதால் உருவான தண்ணீர் பஞ்சத்தினால் மக்கள் கடும் அவதியை சந்தித்தனர்.

செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் என்று சென்னைக்கு தண்ணீர் வழங்கும் அத்தனை ஏரிகளும் வறண்டுபோயின. போரூர், மதுரவாயல் ஏரிகளும் வரண்டு கிடந்தன. தண்ணீர் பிரச்சனையினால் பல உணவகங்கள் மூடப்பட்டன. பல விடுதிகள் மூடப்பட்டன. 25 ரூபாய்க்கு விற்ற தண்ணீர் கேன்களும் 40 ரூபாயை தாண்டி மக்களை கடுமையாக வாட்டியது.

சென்னைக்கு மீண்டும் அப்படி ஒரு நிலைமை வந்துவிடக்கூடாது என்பதற்காக, சென்னை மாநகரில் உள்ள நீர்வளங்களை திட்டமிட்டு நீர் பாதுகாப்பை மேம்படுத்த ஏதுவாக புதிதாக நீர்க் குழுமம் தொடங்கப்படும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழக சட்ட பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியபோது துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், இதை தெரிவித்தார்.

மேலும், சென்னை மாநகரின் வளர்சிக்காக உலக வங்கியின் துணையுடன் திட்டம் வகுப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்படி, பொது சுகாதாரம், போக்குவரத்து மற்றும் குடிநீர் ஆகியவற்றில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் இதற்காக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை நகரின் நீர்வளங்களை திட்டமிட்டு நீர்ப் பாதுகாப்பை மேம்படுத்த புதிய நீர்க் குழுமம் உருவாக்கப்படும் என்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருப்பதை சென்னை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“ஓட்டுக்கு காசு கொடுக்க வாக்காளர்களின் பேங்க் புக்கை வாங்கும் அதிமுக”

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று ஆலோசனை நடத்தினார். அதில் திமுக சார்பில், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்....

’’இந்தப் பொம்மைகளின் பெயர்களைச் சரியாகச் சொல்பவர்களுக்கு பரிசு உண்டு’’

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று முன் தினம் விழுப்புரத்தில் நடந்த பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிவிட்டு சென்னை திரும்பி வரும்போது, மதுராந்தகத்தில் உள்ள சாலையோர உணவகத்தில் சாப்பிட்டார்....

தேமுதிக பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை: நள்ளிரவில் பயங்கரம்!

சென்னை அருகே நள்ளிரவில் தேமுதிக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூரை சேர்ந்த ராஜ்குமார் (36),...

‘நாளைய முதல்வர்’ உதயநிதி – துரைமுருகன் பரபரப்பு பேச்சு… கலக்கத்தில் ஸ்டாலின்!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அனல்பறக்கும் பிரச்சாரங்களை திமுகவும் அதிமுகவும் மேற்கொண்டுவருகின்றன. அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து திமுக பிரச்சாரம் செய்கிறது. அதிமுகவும் சரி பாஜகவும் சரி வாரிசு...
TopTamilNews