கூவத்தூரில் பட்ட பாடு;அமைச்சர் கடம்பூர் ராஜூ கலகல

 

கூவத்தூரில் பட்ட பாடு;அமைச்சர் கடம்பூர் ராஜூ கலகல

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. சசிகலா தலைமையிலான அணியினர் அனைவரும் கூவத்தூரில் உள்ள தனியா ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டனர். அங்கிருந்து சில தப்பித்து ஓடி வந்தனர். ரிசார்ட்டில் தங்கி இருந்தவர்களின் ஆதரவு கணக்கில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனார். ஆனால் அதன் பின்னர் நடந்த காலமாற்றத்தினால் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இணைந்து கட்சியை முன்னெடுத்து செல்கிறார்கள்.

கூவத்தூரில் பட்ட பாடு;அமைச்சர் கடம்பூர் ராஜூ கலகல

இந்நிலையில் கூவத்தூரில் தான் பட்ட பாட்டினை சொல்லி சிரித்தார் அமைச்சர் கடம்பூர் ராஜு. தற்போது அதிமுக மீட்டெடுக்க சசிகலா தரப்பில் ஒரு அணியாகவும், அதிமுகவை நழுவாமல் பாதுகாக்க ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஒரு அணியாகவும் இருந்து வரும் பரபரப்பான சூழலில் பழைய நினைவுகளை மக்களிடையே பகிர்ந்து கொண்டார் அமைச்சர் கடம்பூர் ராஜு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அனைத்து சமுதாய மக்கள் சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் அமைச்சருக்கு மலர் கிரீடம் அணிவித்து வேல் பரிசாக வழங்கப்பட்டது. மக்களின் பாராட்டு மழையில் நனைந்த அமைச்சர் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தார்.

கூவத்தூரில் பட்ட பாடு;அமைச்சர் கடம்பூர் ராஜூ கலகல

அந்த மகிழ்ச்சியில் பேசியபோது , ‘’2016 சட்டமன்ற தேர்தலில் தெய்வத்தினால் நான் தப்பிப் பிழைத்தேன். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். அதனால் நான் அமைச்சர் ஆனது கூட டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.

ஜெயலலிதா மறைந்த பிறகு இந்த ஆட்சி நீடிக்குமா தாங்குமா என்றெல்லாம் மக்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். எங்களுக்கும் இந்த எண்ணம்தான் இருந்தது ஒரு பக்கம் 18 எம்எல்ஏக்கள் போனாங்க, இன்னொரு பக்கம் 11 எம்எல்ஏக்கள் போனாங்கோ. நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த ஆட்சி போய்விடும் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். காரணம் அன்றைய சூழ்நிலை அப்படி இருந்தது . ஒவ்வொருத்தரையும் பிடித்துவைத்து கூவத்தூரில் பட்ட பாடு பெரிய பாடு’’ என்று சொல்லி சிரித்தார்.

கூவத்தூரில் பட்ட பாடு;அமைச்சர் கடம்பூர் ராஜூ கலகல

மேலும்,’’முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமியை பாராட்டியே ஆகவேண்டும் எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலும் அறிவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடம் இருக்கிறது. இதற்கு முன் தேர்தல் வந்தால் வேறு யாரும் வெற்றி பெற்று விடுவார்கள் என்கிற நிலைதான் இருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்வர் முதல்வரின் நிலைப்பாடு அவருடைய நிர்வாகத்திறன் காரணத்தினால் அதிமுகதான் வெற்றிபெறும் என்ற நிலை வந்திருக்கிறது’’ என்றார்.