திமுக எம்.எல்.ஏ. ராஜினாமா; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

 

திமுக எம்.எல்.ஏ. ராஜினாமா; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

புதுச்சேரி மாநிலத்தின் தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்ததால் புதுவை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசின் ஆட்சி தொடர வேண்டுமானால் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் வசம் இருந்த 14 எம்எல்ஏக்களில், இன்று ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்தார்.

திமுக எம்.எல்.ஏ. ராஜினாமா; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

இதையடுத்து காங்கிரஸ் கூட்டணி கட்சியான திமுக எம்எல்ஏவும் திடீரென ராஜினாமா செய்திருக்கிறார். இதனால் ஆளும் காங்கிரஸ் கட்சி 12 உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை இழந்து நிற்கிறது. சபாநாயகரையும் சேர்த்துதான் 12 உறுப்பினர்கள். அவரை தவிர்த்தால் 11 உறுப்பினர்கள்தான். அதே நேரத்தில் எதிர்க்கட்சியானஎன் காங்கிரஸ் 14 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பெரும்பான்மையுடன் இருக்கிறது. இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது புதுச்சேரி காங்கிரஸ்.

திமுக எம்.எல்.ஏ. ராஜினாமா; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து என். ஆர். காங்கிரஸ் ஆட்சியமைக்கும் சூழல் நிலவுவதால் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.