பெரியார் பற்றிய போலி செய்திக்கு விளக்கமளித்துவிட்டு வள்ளுவர் குறித்த விவாதத்திற்கு வரட்டும்… காயத்ரி ரகுராம்

பெரியார் பற்றிய போலி செய்திக்கு விளக்கமளித்துவிட்டு வள்ளுவர் குறித்த விவாதத்திற்கு வரட்டும்… காயத்ரி ரகுராம்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படியான எட்டாம் வகுப்பு இந்தி பாடநூலில் திருவள்ளுவரை தலையில் குடுமி வைத்து பூனூல் அணிந்தவராக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. நெற்றி, கைகளில் பட்டை, மார்புக்குக் குறுக்காக ருத்ராட்ச கொட்டை ஆகியவற்றுடன் காட்சியளிக்கிறார். அந்தணர் போல முழுவதுமாக மொட்டையடித்து தலையின் பின்புறத்தில் மட்டும் குடுமியுடன் வரைந்திருக்கிறார்கள். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் பற்றிய போலி செய்திக்கு விளக்கமளித்துவிட்டு வள்ளுவர் குறித்த விவாதத்திற்கு வரட்டும்… காயத்ரி ரகுராம்

திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை ஒரு தரப்புக்கு சொந்தமானவராக சிறுமைப்படுத்தக்கூடாது என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

1964ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி சட்டப்பேரவையில் வேணுகோபால் சர்மா வரைந்த திருவள்ளுவரின் உருவத்தை அப்போதைய குடியரசு துணைத் தலைவரான சாகிர் உசேன் திறந்துவைத்தார். அதன்பின் கருணாநிதி முதல்வரான பிறகு தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படமாக அது உருமாறியது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

பெரியார் பற்றிய போலி செய்திக்கு விளக்கமளித்துவிட்டு வள்ளுவர் குறித்த விவாதத்திற்கு வரட்டும்… காயத்ரி ரகுராம்

அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் திருவள்ளுவர் வெண்ணிற ஆடை உடுத்தியிருப்பார். நீண்ட நெடிய கொண்டை, தூய தாடி சகிதம் கொண்டிருப்பார். அப்படிப்பட்ட கம்பீரமான திருவள்ளுவரின் உருவத்தை சிபிஎஸ்இ புத்தகத்தில் அலங்கோலப்படுத்தியிருப்பதால் பலரும் வெகுண்டெந்திருக்கிறார்கள். அந்த வகையில்தான் ராமதாசும் தனது கண்டனத்தினை பதிவு செய்திருக்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலினும், CBSE 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் அய்யன் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம்! பா.ஜ.க. அரசு அனுமதிக்கிறது; அடிமை அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கிறது.ஆரிய வித்தைகளை எம் தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது; மானமுள்ள தி.மு.க. பொறுக்காது. எச்சரிக்கை என்று தெரிவித்திருக்கிறார்.

பெரியார் பற்றிய போலி செய்திக்கு விளக்கமளித்துவிட்டு வள்ளுவர் குறித்த விவாதத்திற்கு வரட்டும்… காயத்ரி ரகுராம்

தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரிரகுமாம், ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

’’வான் புகழ் வள்ளுவனுக்கு குடுமி வைத்துவிட்டார்கள் என்று வானுக்கும் பூமிக்கும் குதிக்கும் ஸ்டாலினே இல்லாத யுனெஸ்கோ விருதை பெரியார் பெற்றதாக பாட திட்டத்தில் வைத்து மாணவர்கள் மத்தியில் தவறான தகவலை திணித்ததற்கு முதலில் மன்னிப்பு கேளுங்கள் .
5முறை ஆட்சியில் இருந்தபோது தமிழ் புத்தாண்டு தை முதல் நாள் தான் என வரலாற்றை திரித்து சித்தரித்த திருட்டு திராவிட கும்பல் முதலில் பெரியார் பற்றிய போலி செய்திக்கு விளக்கமளித்துவிட்டு வள்ளுவர் குறித்த விவாதத்திற்கு வரட்டும்’’என்கிறார் அவர்.