‘மாநாடு’டெக்னிக்! கூட்டணி கட்சிகளுக்கு அவர்கள் பாணியிலேயே பதிலளிக்கப்போகும் திமுக

 

‘மாநாடு’டெக்னிக்! கூட்டணி கட்சிகளுக்கு அவர்கள் பாணியிலேயே பதிலளிக்கப்போகும் திமுக

என்னதான் ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்தாலும், மாநாட்டிற்கு இருக்கும் மவுசு தனிதான். பொதுவாகவே தேர்தல் நெருக்கத்தில் மாநாடு நடத்தினால் தொண்டர்களுக்கு மவுசு கூடும். இதை உணர்ந்துதான் அதிமுக சார்பில் இம்மாதம் 24ல் விழுப்புரத்தில் மாநாடு நடைபெற இருக்கிறது.

‘மாநாடு’டெக்னிக்! கூட்டணி கட்சிகளுக்கு அவர்கள் பாணியிலேயே பதிலளிக்கப்போகும் திமுக

திமுக சார்பில் மார்ச் 14ஆம் தேதி அன்று திருச்சில் மாநாடு நடைபெற இருக்கிறது. திருச்சியில் மாநாடு நடத்தினால் திருப்புமுனை ஏற்படும் என்ற நம்பிகையிலும் தேர்தலுக்கு முன்பாக மாநாட்டினை நடத்துகிறது திமுக.

பெரிய கட்சிகள் இப்படி ஒரு ரூட்டைப்பிடித்து போனால், அடுத்த நிலையில் உள்ள கட்சிகளும் , சின்னச்சின்ன கட்சிகளும் சீட்டு பேரத்திற்காக, தங்கள் பலத்தை காட்ட வேண்டுமென தேர்தல் நெருக்கத்தில் மாநாடு நடத்துவதும் வழக்கம்தான்.

அப்படித்தான், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சியை தாராளமாக புகழ்ந்து தள்ளினார்.

‘மாநாடு’டெக்னிக்! கூட்டணி கட்சிகளுக்கு அவர்கள் பாணியிலேயே பதிலளிக்கப்போகும் திமுக

ஸ்டாலின் பேச்சில் பூரிப்படைந்த தோழர்கள், சீட்டு விஷயத்திலும் இப்படி தாராளத்தைக் காட்டினால் நன்றாக இருக்கும் என பேசி வருகிறார்கள்.

திமுக தரப்பில் நாம் இதுபற்றி விசாரித்தபோது, விசயமே வேறாக இருக்கிறது. ’’இந்த மாநாடு டெக்னிக்கெல்லாம் எங்களுக்குத் தெரியாதா என்ன? கம்யூனிஸ்டுகளை தொடர்ந்து காங்கிரஸ், மதிமுக, விசிக, மமக என எல்லா கட்சிகளுமே மாநாடு போட்டு சீட்டுகளை அதிகமாக கேட்கும். அவர்கள் கேட்கிறதையெல்லாம் கொடுத்தால் கடைசியில் நாங்க ஒற்றப்படையில்தான் நிற்கணும். அதனால கூட்டணி கட்சிகளுக்கு அவர்கள் பாணியிலேயே நாங்க திருச்சி மாநாட்டில் பதிலளிப்போம்’’என்கிறது தடாலடியாக.