மனிதருக்குள் என்ன, உயர்வு தாழ்வா? அதைக் கற்பித்து வாழ்வதுவும் மனித வாழ்வா? கமல்

மனிதருக்குள் என்ன, உயர்வு தாழ்வா? அதைக் கற்பித்து வாழ்வதுவும் மனித வாழ்வா? கமல்

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 20ம் தேதியை அன்று ’உலக சமூக நீதி’நாளாக கொண்டாட வேண்டும் என்று கடந்த 2007ம் ஆண்டில் ஐநா பொதுச்சபையில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 20ம்தேதியை உலக சமூக நீதி நாளாக கொண்டாடி வருகின்றனர்.

மனிதருக்குள் என்ன, உயர்வு தாழ்வா? அதைக் கற்பித்து வாழ்வதுவும் மனித வாழ்வா? கமல்

ஒவ்வொரு நாடும் தன் மக்களோட சம உரிமையினை மதித்து அம்மக்களுக்கு சம வாய்ப்பினை வழங்கினால் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்றும், அப்படி சமூகநீதி நிலைநாட்டப்படும் போதுதான் அனைவரும் ஒரு சமுதாயம் எனும் ஐநாவின் இலக்கினை அனைவரும் அடைவைது சத்தியாகும் என்று பலரு வலியுறுத்தி வருகின்றனர்.

இன்றைய நாள் உலக சமூக நீதி நாள் என்பதால், ‘’மனிதருக்குள் என்ன, உயர்வு தாழ்வா? அதைக் கற்பித்து வாழ்வதுவும் மனித வாழ்வா? சமூக நீதி நாள் இன்று உலகத்துக்கு. அக்குணமே உயிர்மூச்சு மய்யத்துக்கு. அனைவரும் சமமென்னும் பொன்னுலகம் நாம் படைப்போம்’’ என்று தெரிவித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்.