ஒரே நாளில் பொய்த்துப்போன தமிழிசையின் நேர்மை; சுட்டிக்காட்டி எழும் குற்றச்சாட்டு

 

ஒரே நாளில் பொய்த்துப்போன தமிழிசையின் நேர்மை; சுட்டிக்காட்டி எழும் குற்றச்சாட்டு

புதுச்சேரி மாநில சட்டப்பேரவைக்கு 3 பேரை நியமன எம்.எல்.ஏக்களாக அறிவித்தது மத்திய அரசு. அந்த 3 எம்.எல்.ஏக்களையும் பாஜக எம்.எல்.ஏக்கள் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை குறிப்பிட்டிருப்பது பெரும் சர்ச்சையை எழுப்பி இருக்கிறது.

ஒரே நாளில் பொய்த்துப்போன தமிழிசையின் நேர்மை; சுட்டிக்காட்டி எழும் குற்றச்சாட்டு

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் நாரயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் சட்டசபையில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தலா 14 எம்.எல்.ஏ.க்களுடன் சமபலத்தில் உள்ளன.

இந்த சூழ்நிலையில் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி விடுவிக்கப்பட்டு, தெலுங்கான ஆளுநரான தமிழிசை நியமனம் செய்யப்பட்டார். புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக பதவியேற்ற முதல் நாளிலேயே, வரும் பிப்ரவரி 22-ம் தேதி, புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவிட்டார்.

ஒரே நாளில் பொய்த்துப்போன தமிழிசையின் நேர்மை; சுட்டிக்காட்டி எழும் குற்றச்சாட்டு

நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிப்பாரா? இல்லை, ராஜினாமா செய்வாரா? என்ற நிலையில், சிக்கலை எப்படி சமாளிப்பது என்பது குறித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கட்சிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், 21ம்தேதி என்று ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவித்தார் முதல்வர் நாராயணசாமி. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையுடன் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ‘’புதுச்சேரி பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரலாற்றுப் பிழை செய்துள்ளார். எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி அளித்த கடிதத்தின் அடிப்படையில் பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பாக துணைநிலை ஆளுநர் தமிழிசை கடிதம் தந்துள்ளார். அந்த கடித்தத்தில் மிகப்பெரிய தவறு இருக்கிறது. நியமன எம்எல்ஏக்களை பாஜக என குறிப்பிடப்பட்டுள்ளார்’’என்றார்.

ஒரே நாளில் பொய்த்துப்போன தமிழிசையின் நேர்மை; சுட்டிக்காட்டி எழும் குற்றச்சாட்டு

மேலும், ‘’சட்டப்பேரவை பதிவேட்டில் நியமன எம்எல்ஏக்களை பாஜக என குறிப்பிடவில்லை. நியமன எம்எல்ஏக்களை பாஜக என சபாநாயகரும் அங்கீகரிக்கவில்லை. ஆதலால் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு செய்துள்ளார். இதுகுறித்து விளக்கமளிக்க ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இதுகுறித்து சபாநாயகரிடமும் முறையிடுவேன்”எனவும் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து மூத்த அரசியல் விமர்சகர் அருணன், ‘’நியமன உறுப்பினர்களை பாஜக உறுப்பினர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் தமிழிசை.
ஏதோ பாஜக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் போலே! “நேர்மையாக நடந்து கொள்வேன்” என்றார். ஒரே நாளில் அது பொய்த்துப் போனது’’என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்.