கடைசி ஆசையை நிறைவேற்றிய மாஜி முதல்வர்! கடைசி வரைக்கும் வராத நடிகர்!

 

கடைசி ஆசையை நிறைவேற்றிய மாஜி முதல்வர்! கடைசி வரைக்கும் வராத நடிகர்!

வாழும்போதுதான் பார்க்க முடியவில்லை. இறுதிச்சடங்கிலாவது அவர் வருவாரே. என் ஆத்மா சாந்தியடையும் என்று நினைத்து பலரும் தற்கொலை செய்து கொள்வதுண்டு. அப்படித்தான் கர்நாடகத்தில் ராமகிருஷ்ணா என்கிற இளைஞர் தனது வீட்டு பிரச்சனையினால் தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர், தனது இறுதிச்சடங்கில் கர்நாடக எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையாவும், நடிகர் யாஷ் -ம் கலந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.

கடைசி ஆசையை நிறைவேற்றிய மாஜி முதல்வர்! கடைசி வரைக்கும் வராத நடிகர்!

கேஜிஎப் முதல் பாகம் ரிலீசாகி யாஷ்க்கு இந்தியா எங்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். கேஜிஎப் இரண்டாம் பாகம் வரும் ஜூலையில் வெளிவர இருக்கிறது. அவருக்கு தான் தீவிர ரசிகர் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ராமகிருஷ்ணா.

இந்த விசயம் மீடியாவில் வெளியானதும், சித்தராமையா ராமகிருஷ்ணாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார். சித்தராமையா பங்கேற்க வருகிறார் என்றதுமே அந்த கிராமமே திரண்டு வந்திருந்தது.

கடைசி ஆசையை நிறைவேற்றிய மாஜி முதல்வர்! கடைசி வரைக்கும் வராத நடிகர்!

ராமகிருஷ்ணாவின் கடைசி ஆசையை சித்தராமையா நிறைவேற்றியது போல நடிகர் யஷ் நிறைவேற்றவில்லை. அவர் அப்படி செய்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், ‘’உங்களிடம் இருந்து விசில், கைத்தட்டலையும்,அன்பையும் மட்டுமே எதிர்பார்க்கிறோம். இதை எதிர்பார்க்கவில்லை. ராமகிருஷ்ணாவின் ஆத்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி’’ என்று தெரிவித்துள்ளார் யஷ்.