கவுண்டமணியின் காமெடி நிஜத்தில் நடக்குது! பிச்சைக்காரர்களுக்கு சங்கம் -தலைவி

கவுண்டமணியின் காமெடி நிஜத்தில் நடக்குது! பிச்சைக்காரர்களுக்கு சங்கம் -தலைவி

பிச்சைக்காரர்களூக்கு என்று ஒரு சங்கம், மாநாடு எல்லாம் இருக்குது என்றும், யார் யார் எந்தெந்த தெருவில் பிச்சை எடுக்க வேண்டும் தீர்மானம் எல்லாம் நிறைவேற்றுவதாக சினிமாவில் கவுண்டமணியின் காமெடி இருக்கும். ஆனால், நிஜத்தில் அது நடக்கிறது.

கவுண்டமணியின் காமெடி நிஜத்தில் நடக்குது! பிச்சைக்காரர்களுக்கு சங்கம் -தலைவி

ஒருவர் பிச்சை எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அவர் இஷ்டத்திற்கு ஒரு இடத்தில் போய் பிச்சை கேட்கமுடியாது போலிருக்கிறது. யார் யாருக்கு எந்த இடம் என்று ஒதுக்கிவிட்டு, அவர்களை கண்காணித்து வர ஒரு கூட்டம் இருக்கிறது. வசூல் பணத்தில் இடம் ஒதுக்கி தருவோருக்கு மாமூல் கொடுக்க வேண்டிய நிலைமையும் இருக்கிறது.

கவுண்டமணியின் காமெடி நிஜத்தில் நடக்குது! பிச்சைக்காரர்களுக்கு சங்கம் -தலைவி

எடுக்கிறது பிச்சை. இதில் லொல்லு பாரு.. எகத்தாளத்த பாரு.. என்று கேட்க முடியாது. அப்படி கேட்ட ஒரு முதியவருக்கும் அவரது மனைவிக்கும் கடுமையான திட்டு விழுந்திருக்கிறது.

புதுக்கோட்டையில் சாந்தநாத சுவாமிகள் அருள்மிகு வேதநாயகி அம்மாள் சன்னதி கோவில் முன்பு எந்த இடத்தில் யார் அமர்ந்து பிச்சை எடுக்க வேண்டும் என்று பிரித்து விட்டு, அவர்களிடம் மாமூல் வசூலித்து வருகிறார் ஒரு பிச்சைக்கார பெண்.

கவுண்டமணியின் காமெடி நிஜத்தில் நடக்குது! பிச்சைக்காரர்களுக்கு சங்கம் -தலைவி

அந்த கோவிலில் பிச்சை எடுக்க வேண்டும் என்றால் அந்த பெண்ணுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் மாமூல் கட்ட வேண்டுமாம். முதியவரும் அவரது மனைவியும் இந்த பெண்ணிடம் அனுமதி வாங்கிய இடத்தில் அமர்ந்து பிச்சை எடுத்து வருகிறார்கள். அதற்காக இருவரும் மாதம் 2 ஆயிரம் கொடுத்து வருகிறார்கள்.

கவுண்டமணியின் காமெடி நிஜத்தில் நடக்குது! பிச்சைக்காரர்களுக்கு சங்கம் -தலைவி

தினமும் அந்தப்பெண்ணுக்கு 1600 ரூபாய் மாமூல் வசூலாகிறதாம்.

பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து போலீசில் புகார் கொடுக்கவும், ஊடகங்களின் உதவியினால் உயரதிகாரிகள் வரைக்கும் புகார் சென்றதால், விஷயம் தெரிந்து தலைமறைவாகி விட்டார் அந்தப்பெண்.